ADVERTISEMENT

இ.பி.எஸ், ஓபிஎஸ்  தலைமையில் அனைவரும்  ஒற்றுமையுடன் இருக்கிறோம்!   அமைச்சர் சீனிவாசன் 

03:43 PM Jun 09, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT


அதிமுகவில் ஜெயலலிதாவை போல் அதிகாரம் மிகுந்த ஒரு தலைமை உருவாக்க வேண்டும். இரட்டை தலைமையால் யார்? முடிவெடுப்பது என்ற குழப்பம் கட்சியில் இருப்பதால் உடனே பொதுக்குழுவை கூட்டி ஒற்றை தலைமை பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா மதுரையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அதிரடி பேட்டி கொடுத்தார்.

ADVERTISEMENT

இது ஆளும் கட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ராஜன்செல்லப்பா கருத்துக்கு ஆதரவாக பெரம்பலூர் மாவட்ட செயலாளரும் குன்னம் சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரனும் குரல் கொடுத்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தான் திண்டுக்கல்லில் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனோ....தமிழகத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி பொய்யான வாக்குறுதிகளை கூறி வெற்றி பெற்று இருக்கிறது. இவை அனைத்தும் மக்களை ஏமாற்றும் முயற்சியாகும். நீட்தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து, விவசாயகடன் தள்ளுபடி, மாதம் தோறும் ஆறாயிரம் போன்ற வாக்குறுதிகளை யாராலும் நிறைவேற்றமுடியாது. நாங்கள் ஆளும்கட்சியாக இருந்ததால் இதனை சொல்லவில்லை. ஆனால் நிறைவேற்றமுடியாத வாக்குறுதிகளை திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி கூறி பொய்யான வெற்றியை பெற்றுள்ளனர். ஆனால் எங்களுக்கு ஏற்பட்ட தோல்வி ஒரு படிப்பினையாகும் . இதன் மூலம் வருகிற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்ட மன்ற தேர்தலில் புதிய உத்வேகத்துடன் செயல்பட்டு வாக்காள மக்கள் மனதில் இடம் பிடிப்போம்.

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என ராஜன் செல்லப்பா கூறி இருக்கிறார். தற்பொழுது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ.பன்னீர் செல்வம் தலைமையில் சிறப்பான நிர்வாகம் நடைபெறும் வருகிறது . அவர்கள் தலைமையின் கீழ் அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் ஒற்றுமையாக பணியாற்றி வருகிறோம் .

எங்களுக்குள் எந்த ஒரு குழப்பமும் இல்லை. இடையில் சிறு சிறு பிரச்சினை எழும்போது கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் சச்சரவை போல் பேசி தீர்த்து கொள்ளவேண்டும். அவரது கருத்தை வெளியே சொல்லாமல் அதற்குரிய இடமான செயற்குழுவில் தான் கூறியிருக்கவேண்டும். அதிமுகவை பொருத்தவரை அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் மருதராஜ் மற்றும் நகரம், ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் இருந்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT