seenivasan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

அண்ணா நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை அதிமுகவினர் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் சீனிவாசன்,

Advertisment

சின்னத்தம்பி யானை காட்டுக்குள் இருப்பதை சாப்பிடுவதை விட்டுவிட்டு நாட்டுக்குள் இருக்கின்ற தீவனங்களை சாப்பிட்டு பழகிவிட்டதுஅதனால் உள்ளே வருகிறது. ஆனால் இந்த யானைக்கு பயிற்சி கொடுப்பதற்கு, அதனுடைய அசைவுகள் பற்றி எல்லாம் தெரிந்திருக்கக்கூடிய அறிவியலாளர்கள், ஐஎஃப்எஸ் படித்தவர்கள் அந்த யானையை கும்கி யானையை போய் சேர்ந்து விட்டால்யானை கூட்டங்களோடு ஒன்றாக இருக்கும் என கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனை என்னிடம் சொல்லியிருக்கிறார்கள். அந்தக் கருத்துகளைப் பரிசீலித்துவருகிறோம். இது ஒருநல்ல முடிவுதான். அதை வேண்டாம் என்று மக்கள் கருதினால்அதற்கான மறுபரிசீலனை சிந்தனையும் செய்யப்படும்.

முதலில் அந்த யானை பிடிப்பதற்கான வேலைகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். யானைக்கு எந்த விதமான ஆபத்தும் வரக்கூடாது, அந்த யானையினால் மக்களுக்கும் ஆபத்து வரக்கூடாது அதுதான் வனத்துறையின் கருத்து. அதுதான் தற்போது செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. யானைக்கு மதம் பிடித்தால் என்ன செய்வது என்ற முன்யோசனையுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதுவரைக்கும் மக்களுக்கு ஆபத்து இல்லை. எப்படியாவது காட்டுக்குள் அழைத்துச் செல்லயோசனைகள் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் 101 யானை வழித்தடங்கள் உள்ளது. தற்போது அவைஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால்தான் அந்த இடங்களுக்கு யானைகள் வருகிறது. இது மக்களாகவேபார்த்து திருந்த வேண்டும் அதற்குரிய வழிகளையும் அரசு எடுக்கும் எனக் கூறினார்.