ADVERTISEMENT

“மனித வெடிகுண்டா மாறுவேன்...” ; கொந்தளித்த உதயகுமார் - போஸ்டரால் பரபரப்பு

06:34 PM Mar 21, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுக முன்னாள் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஒட்டப்பட்ட போஸ்டர்கள் திருப்பூர் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் சிவகங்கையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 11 ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னையிலிருந்து மதுரைக்கு விமானத்தில் சென்றுள்ளார். அப்போது, எடப்பாடியுடன் விமான நிலைய பேருந்தில் பயணித்த அமமுகவை சேர்ந்த ராஜேஸ்வரன் என்பவர், அண்ணன் எடப்பாடியார் என அவரைக் கூப்பிட்டு... எடப்பாடி பழனிசாமியின் முகத்திற்கு நேராக... துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர். 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை தென்னாட்டு மக்களுக்கு எதிராக கொடுத்தவர்" என பல்வேறு கோஷங்களை எழுப்பிக்கொண்டு ஃபேஸ்புக்கில் லைவ் டெலிகாஸ்ட் செய்துள்ளார்.

ஒரு கட்டத்தில் விரக்தியடைந்த எடப்பாடியின் பாதுகாவலர் ஒருவர், அந்த இளைஞரின் செல்போனை பிடுங்கிக்கொண்டு அவரைத் தாக்கியுள்ளார். மேலும் இந்த விவகாரம் எடப்பாடி ஆதரவாளர்களுக்கு தெரிய வரவே, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் அமமுக கட்சியைச் சேர்ந்த நபரை சரமாரியாக தாக்கி விமான நிலைய பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, ராஜேஸ்வரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து அவரை தாக்கியதற்காக எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கடந்த 13ம் தேதியன்று மதுரை பழங்காநத்தத்தில் அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது, பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், "திமுகவின் சர்வாதிகார போக்கு தொடர்ந்தால்... அதிமுக தொண்டர்கள் மனித வெடிகுண்டாக மாறுவார்கள். நாங்கள் ஜெயிலுக்கு போவதற்கு பயந்தவர்கள் இல்லை. பல ஜெயில்களை நாங்கள் பார்த்துள்ளோம்" என பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்நிலையில், தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசிய ஆர்.பி. உதயகுமாரை கைது செய்ய வேண்டும் என திமுக சார்பில் சுப்ரமணியபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஓபிஎஸ் அணியை சேர்ந்த திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் முன்னாள் அமைச்சர் உதயகுமாரை கண்டித்தும் அவரை கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT