தமிழகம் முழுக்க விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணிஅமைப்பு ஒவ்வொரு ஊரிலும் தெருக்கள் தோறும்விநாயகர் சிலைகளை பொது இடத்தில் மக்கள்வழிபாட்டுக்காக வைத்துள்ளார்கள். இந்த சிலைகளை இரண்டு மூன்று நாட்கள் கழித்து நீர்நிலைகளில் கரைத்து வருகிறார்கள். அந்தவரிசையில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு முன்பு ஊத்துக்குளியில் இந்து முன்னணி சார்பாக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 AIADMK MLA  on Hindu munnani

Advertisment

 AIADMK MLA  on Hindu munnani

Advertisment

இதில் சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தோப்பு வெங்கடாஜலம் கலந்துகொண்டு இந்து முன்னணியை வாழ்த்தி பேசினார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ. இந்து முன்னனி கூட்டத்தில் கலந்து கொண்டது அரசியல் ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இது நடந்திருக்குமா? அம்மா இல்லாததால் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பலரும் பா.ஜ.க., இந்து முன்னணி என பல வீடுகளில் அவர்கள் விருப்பப்படி வசிக்கத் தொடங்கி விட்டார்கள் என கிண்டலாகவும் ர.ர.க் கூறுகிறார்கள்.

எனது தொகுதியில் நடைபெற்ற ஒரு பொதுவிழாவில் கலந்துகொண்டேன் அவ்வளவுதான் என்கிறார் எம்.எல்.ஏ. தோப்பு.