ADVERTISEMENT

சித்ரா மரணத்திற்கு இதுவே காரணம்... நசரத்பேட்டை போலீசார் நீதிமன்றத்தில் தகவல்!

04:53 PM Jan 20, 2021 | kalaimohan

ADVERTISEMENT

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள சித்ராவின் கணவர் ஹேம்நாத், ஜாமின் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ஹேம்நாத்தின் பத்தாண்டு கால நண்பரான காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த சையது ரோஹித், சென்னை உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

ADVERTISEMENT

அதில், ‘ஹேம்நாத் பல பெண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு பணம் பறித்து வந்தார். பலமுறை எச்சரித்தும் கேட்காததால், அவரிடம் இருந்து விலகியிருந்தேன்.தன்னை பெரிய தொழிலதிபர் போலவும், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு நெருக்கமானவராகவும் காட்டிக் கொண்டு,நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வார். அதுபோலவே, சித்ராவுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். சித்ராவின் நடத்தை மீது சந்தேகம் கொண்டு, அவரை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சக நடிகருடன் நடனமாடியது குறித்து, இருவருக்கும் இடையில் சண்டை நீடித்து வந்தது. அனைத்து தகவல்களும் தெரிந்த என்னை இதுவரை போலீசார் விசாரணைக்கு அழைக்கவில்லை.’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஹேம்நாத்தின் சந்தேகத்தால் தான் நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், நடிகை சித்ராவின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சித்ரா கொலை வழக்கில் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காயம் எதுவும் கழுத்தில் இல்லை என சித்ராவின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில், ஜாமீன் மனுவில் இடையீட்டு மனுதாரராக ஹேம்நாத் நண்பரான சையதை அனுமதிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், பிப்ரவரி 2-க்குள் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT