ADVERTISEMENT

மலைக்கிராம மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸ்; நடிகர் பாலாவின் நெகிழ்ச்சி செயல்

06:30 PM Aug 17, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் கடம்பூர், குன்றி மலைவாழ் மக்களின் மருத்துவ தேவைகளுக்காக நகைச்சுவை நடிகர் பாலா, அவரது சொந்த நிதியில் வழங்கிய ஆம்புலன்சு வாகனத்தின் சேவை துவக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் தலைமை தாங்கினார். ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஆணையாளர் ஜானகி ரவீந்திரன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் டாக்டர் அம்பிகா சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக ஈரோடு எஸ்பி ஜவகர் கலந்து கொண்டு, இலவச ஆம்புலன்ஸ் சேவையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து நடிகர் பாலா பேசுகையில் கூறியதாவது: “கடம்பூர் மற்றும் குன்றியை சுற்றியுள்ள 12 கிராமத்தில் 8 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில், இந்த மலைக்கிராமத்தை சுற்றி வசிக்கும் மக்களுக்கு பாம்பு, வன விலங்களால் பாதிப்பு ஏற்பட்டாலோ, உடல் நலன் பாதிப்பு ஏற்பட்டாலோ 16 கி.மீட்டர் தொலைவில் இருந்து தான் ஆம்புலன்சு வாகனம் வர வேண்டும். இதையறிந்ததும், இவர்களுக்கு ஆம்புலன்சு வாகனம் வாங்கி தர வேண்டும் என எண்ணினேன். இதற்காக யாரிடமும் நான் பணம் வாங்காமல், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அந்த பணத்தை சேர்த்து இந்த ஆம்புலன்சு வாகனத்தை வாங்கி கொடுத்தேன். இது எனது 2 ஆவது ஆம்புலன்சு வாகனம் ஆகும். நான் இதேபோல் ஆம்புலன்சு வசதியின்றி இருக்கும் குக்கிராமங்கள் மற்றும் மலைக்கிராம மக்களுக்கு 10 ஆம்புலன்சு வாகனம் எனது சொந்த நிதியில் வாங்கி தர முடிவு செய்துள்ளேன்” இவ்வாறு பாலா கூறினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT