ADVERTISEMENT

எம்.பி.பி.எஸ் சீட் வாங்கி கொடுப்பதாக 6 லட்சம் மோசடி; போலீசார் விசாரணை!

09:47 AM May 13, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சேலத்தில், எம்.பி.பி.எஸ் சீட் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி நூதன முறையில் 6 லட்சம் ரூபாய் சுருட்டிய டெல்லியைச் சேர்ந்த மருத்துவர் மீதான புகார் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


சேலம் கிருஷ்ணம்மாள் நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவருடைய 19 வயது மகள் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த ஹர்ஷவர்தன் என்பவர் சரவணனை தொடர்பு கொண்டு பேசினார்.


அப்போது அவர், தான் மருத்துவராக பணியாற்றி வருவதாகவும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் தனக்கு நெருக்கமான தொடர்பு இருப்பதாகவும், அதன்மூலம் ரோஷினிக்கு எம்.பி.பி.எஸ் சீட் வாங்கிக் கொடுப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், எம்.பி.பி.எஸ் சீட் வாங்கிக் கொடுக்க 6 லட்சம் ரூபாயும் கேட்டுள்ளார். மகளுக்கு எப்படியாவது எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தால் போதும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சரவணன், ஹர்ஷவர்தன் கேட்டபடியே அவரிடம் 6 லட்சம் ரூபாய் கொடுத்தார். இத்தொகை, அவரின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்டது.


ஆனால் ஹர்ஷவர்தன் உறுதி அளித்தபடி சீட் வாங்கிக் கொடுக்கவில்லை. சந்தேகத்தின் பேரில் அவரை சரவணன் தொடர்பு கொண்ட போதெல்லாம் அவருடைய செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.


இதையடுத்து சரவணன், சேலம் மாநகர சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT