ADVERTISEMENT

காதலியை கொடூரமாக கொலை செய்த 58 வயது காதலன் - அதிர்ச்சிகுள்ளான காவல்துறையினர்!

03:57 PM Aug 26, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது சேமங்கலம். இப்பகுதியில் உள்ள மலட்டாறு காட்டுப் பகுதியில் கடந்த 4ஆம் தேதி எரிக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சடலம் கிடந்தது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் சந்தானகிருஷ்ணன் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை வழக்காக பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான தனிப்படை போலீசார் அந்த பெண்ணை கொலை செய்தது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ADVERTISEMENT

இந்த வழக்கு தொடர்பாக தனிப்படை போலீசார் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ரெட்டி குப்பத்தைச் சேர்ந்த 58 வயது ஏழுமலை என்பவரை கைது செய்துள்ளனர். இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் கூரியர் அலுவலகத்தில் காவலராக வேலை பார்த்து வருவதாகவும், இவருக்கு அமுதா என்ற மனைவியும் ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் ரெட்டி குப்பத்தில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் நாவல் மருதூரை சேர்ந்த 51 வயது ஜெயலட்சுமி என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகி பின்னர் இருவரும் காதலர்களாக இருந்துள்ளனர். ஜெயலட்சுமியின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் தனிமையில் இருந்த ஜெயலட்சுமி சென்னையில் மாம்பலம் பகுதியில் ஒரு தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் ஏழுமலை ஜெயலட்சுமி இருவரும் சென்னையில் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை தொடர்ந்துள்ளனர். மேலும் சென்னையிலுள்ள கண்ணம்மா பேட்டை பகுதியில் ஜெயலட்சுமியும் ஏழுமலையும் தனி வீடு எடுத்து இருவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அவர், “தனக்கு தெரியாமல் ஜெயலட்சுமி வேறு ஒரு நபருடன் மொபைல் போனில் பேசி வந்ததாகவும் இதனால் தனக்கும் ஜெயலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். அதே போல் ஜெயலட்சுமி எனக்கு துரோகம் செய்து விட்டு வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். அதனால் ஜெயலட்சுமியை கொலை செய்வது என திட்டமிட்டேன். அதன்படி கடந்த 3ஆம் தேதி பண்ருட்டி அருகில் உள்ள திருத்துறையூர் கிராமத்தில் எனது மாமனார் இறந்து போனார் அவரது கரும காரியத்திற்கு செல்ல வேண்டும் என ஜெயலட்சுமியிடம் பொய் கூறி ஏமாற்றி சென்னையில் இருந்து பஸ் மூலம் அவரை அழைத்து வந்தேன். அரசூர் பஸ் நிலையத்தில் இருவரும் இறங்கினோம் அங்கிருந்து மலட்டாறு வழியாக நடந்து சென்றோம்.

அப்படி செல்லும் போது காட்டுப்பகுதியில் ஜெயலட்சுமிக்கு தெரியாதவாறு அவரது பின்புறமிருந்து மரக்கட்டையால் அவரது மண்டையில் தாக்கினேன். பின்னர் கையில் வைத்திருந்த இரும்பு உளியால் அவரது வயிற்றில் குத்தியதில் ஜெயலட்சுமி மயங்கி கீழே விழுந்து இறந்தார். அங்கு கிடந்த பனமட்டை மற்றும் விரகுகளை சேகரித்து ஜெயலட்சுமி மீது போட்டு தீவைத்தேன். பிறகு அவர் வைத்திருந்த மொபைல் போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டேன்” இவ்வாறு போலீசாரிடம் ஏழுமலை வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து ஏழுமலை மறைத்து வைத்திருந்த அந்த மரக்கட்டை, இரும்பு உளி மற்றும் ஜெயலட்சுமி வைத்திருந்த செல்போன் சிம்கார்டு ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி உள்ளனர். ஏழுமலை மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் உளுந்தூர்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT