ADVERTISEMENT

வேலை வாங்கி தருவாக 5.60 லட்சம் ரூபாய் மோசடி: மாஜி அரசு ஊழியர் கடத்தல்... நில புரோக்கர்கள் உள்பட 4 பேர் கைது!

10:32 AM Nov 23, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அரசு வேலை வாங்கிக் தருவதாகக் கூறி 5.60 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக மாஜி அரசு ஊழியரை, பாதிக்கப்பட்ட நில புரோக்கர் கூட்டாளிகளுடன் சென்று காரில் கடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக புரோக்கர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாஜி ஊழியரிடம் விசாரணை நடந்துவருகிறது.

சேலம் உடையாப்பட்டி காலனியைச் சேர்ந்தவர்கள் ஜலகண்டேஸ்வரன் மற்றும் வெங்கடேஷ்வரன். இவர்கள் இருவருக்கும் இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் ஓட்டுநர் வேலை வாங்கித் தருவதாகக் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் (40) என்பவர் கூறியுள்ளார்.

மதுரை மாவட்டம் கே.புதூர் சர்வேயர் காலனியைச் சேர்ந்த சண்முகராஜேஸ்வரன் (43) என்பவருக்கு அரசுத்துறை உயர் அதிகாரிகளிடம் நல்ல செல்வாக்கு இருப்பதாகவும், அவரிடம் பணத்தைக் கொடுத்தால் நிச்சயம் வேலை வாங்கிக் கொடுத்துவிடுவார் என்றும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய ஜலகண்டேஸ்வரன், வெங்கடேஷ்வரன் ஆகிய இருவரும் 5.60 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர். இந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்ட லட்சுமணன், அதை மதுரையில் உள்ள சண்முகராஜேஸ்வரனிடம் கொடுத்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் இதுவரை வேலை வாங்கிக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அரசு வேலை வாங்கிக் கொடுங்கள் அல்லது பணத்தைத் திருப்பிக்கொடுத்துவிடும்படி பணம் கொடுத்தவர்கள் கூறியுள்ளனர். நெருக்கடி அதிகமானதால் லட்சுமணன், தன் நிலையைக் கூறி சண்முகராஜேஸ்வரனிடம் பணத்தைக் கேட்டுள்ளார். ஆனால் அவரோ பணம் வாங்கியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அதனால் திருப்பித் தர முடியாது என்று கூறியிருக்கிறார்.

இதனால் ஏமாற்றமடைந்த லட்சுமணன், சண்முகராஜேஸ்வரனை கடத்திச் சென்று மிரட்டி, தான் கொடுத்த பணத்தை மீட்க திட்டமிட்டார். லட்சுமணன், நில புரோக்கராகவும் இருப்பதால், சேலத்தில் மலிவான விலையில் நிலம் விற்பனைக்கு வந்துள்ளதாகவும், அதைப் பார்க்க வருமாறும் சண்முகராஜேஸ்வரனை சேலத்திற்கு அழைத்துள்ளார். அதை நம்பி சேலம் சீலநாயக்கன்பட்டிக்கு வந்த சண்முகராஜேஸ்வரனை லட்சுமணன், அவருடைய தம்பி ஆனந்தன் (38) மற்றும் கூட்டாளிகள் 2 பேர் என நான்கு பேர் சேர்ந்து காரில் தாதகாப்பட்டியில் உள்ள ஆனந்தன் வீட்டிற்குக் கடத்திச் சென்று அடைத்துவைத்தனர்.

அவரை சரமாரியாக தாக்கிய அந்தக் கும்பல், பணத்தைக் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்றும் மிரட்டியுள்ளனர். இந்நிலையில் திங்கள்கிழமை (நவ. 22) அதிகாலை நேரத்தில் லட்சுமணனும் கூட்டாளிகளும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சண்முகராஜேஸ்வரன், அவர்களிடமிருந்து தப்பித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.

இதுகுறித்து விசாரித்த உதவி ஆணையர் அசோகன் மற்றும் காவலர்கள், லட்சுமணன், அவருடைய தம்பி ஆனந்தன் மற்றும் கூட்டாளிகளான மஞ்சுநாதன், கிருஷ்ணகுமார் ஆகியோரை மடக்கிப்பிடித்தனர்.

விசாரணையில், பணம் வாங்கிய மோசடி பேர்வழியான சண்முகராஜேஸ்வரன் கரூர் மாவட்டத்தில் சர்வே துறையில் கடந்த 2011ஆம் ஆண்டு அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். கிரானைட் மோசடி வழக்கில் இவர் மீது மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து, கைது செய்தனர். அதன்பிறகு பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, அரசுத்துறை உயர் அதிகாரிகள் பலரை தனக்குத் தெரியும் என்று கூறி பலரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுவந்துள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT