ADVERTISEMENT

5 டன் ரேஷன் அரிசி மினி லாரியுடன் பறிமுதல்... 3 பேர் கைது!!

10:41 AM Jun 21, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

திருப்பத்தூர் மாவட்ட பகுதிகளில் இருந்து ஆந்திர மாநிலம் குப்பம் பகுதிக்கு தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. அதன்பேரில் வேலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமார் தலைமையில் போலீசார் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதியில் ஜூன் 20ஆம் தேதி இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

ADVERTISEMENT

அப்போது வாணியம்பாடியிலிருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்றுகொண்டிருந்த மினி லாரியைத் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து லாரியை ஓட்டி வந்த 39 வயதான டிரைவர் பெருமாள், அவருடன் வந்த 21 வயதான சஞ்சீவி ஆகியோரை கைது செய்தனர். இதேபோல் உமாராபாத் பகுதியில் ரோந்து சென்றபோது, அப்பகுதி மக்கள் அளித்த ரகசிய தகவலின் பேரில் பிச்சைமுத்து என்பவர் வீட்டின் அருகே கடத்துவதற்காக பதுக்கிவைத்திருந்த ஒரு டன் ரேஷன் அரசியைப் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வழக்குப் பதிவுசெய்த வேலூர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் 35 வயதான பிச்சைமுத்து என்பவரை கைது செய்தனர். லாரியில் இருந்த 4 டன் ரேஷன் அரிசி, சாலையில் இருந்த ஒரு டன் அரிசி என 5 டன் அரிசியை அரசுக்கிடங்கில் ஒப்படைத்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர். இரண்டு வழக்கிலும் இன்னும் இதன் பின்னால் யார், யார் உள்ளார்கள் என கைதானவர்களிடம் விசாரணை நடத்திவருகிறார்கள் போலீஸார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT