Skip to main content

2மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்!

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

Villagers involved in road blockade for 2 hours

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதிகளில் பலமாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மாலை நேரங்களில் மழை பெய்வதால் சாலைகளில் நீர் ஓடுகிறது. முறையாக கால்வாய்கள் தூர்வாரப்படாததால் மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்பு பகுதிக்குள் வருவதாக பொதுமக்கள்  குற்றம் சாட்டினர். கால்வாய் தூர்வாராத அதிகாரிகளைக் கண்டித்து கச்சேரி சாலையில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை முன்பாக காமராஜபுரம் பொதுமக்கள் ஆகஸ்ட் 27 ஆம் தேதி காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த நகராட்சி அதிகாரிகள் மற்றும் வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  வீடுகளுக்குள் கழிவுநீர் வராதபடி கால்வாய்கள் தூர்வாரப்பட்டு சரிசெய்து தரப்படும் என நகராட்சி அதிகாரிகள் வாக்குறுதி அளித்தனர். இதனால் சுமார் 2 மணி நேரத்துக்குப்பின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாயமான சிறுமி! போலீஸ் அலட்சியத்தால் தந்தை விபரீத முடிவு 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Girl Child missing police investigation

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனியார் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஈச்சங்கால் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சபரியும் பள்ளி மாணவியும் சில மாதங்களாக  காதலித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி விடியற்காலை 4 மணியளவில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர்கள் தனது மகள் காணாமல் போனதாக கடந்த 18ஆம் தேதி அம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் அச்சிறுமியின் தந்தை மற்றும் அவருடைய குடும்பத்தினர் அம்பலூர் காவல் நிலையத்திற்கு வருகை தனது மகளை கண்டுபிடித்தீர்களா? என கேட்கும் பொழுது காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மாணவியின் பெற்றோர்களை தரக்குறைவாக பேசி சிறுமியின் சித்தப்பாவை தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர் மீண்டும் நேற்று மாலை அம்பலூர் காவல் நிலையம் முன்பு வந்து தங்களது மகளை கண்டுபிடித்து தரக் கூறியும், தங்களை தாக்கிய காவல் உதவி ஆய்வாளர் ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரியும் திடீரென தர்ணாவில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டு இருந்த போது, சிறுமியின் தந்தை தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ குளிக்க முயன்றார். இதன் காரணமாக அம்பலூர் காவல் நிலையம் முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.