ADVERTISEMENT

தமிழகத்திற்குள் நாளை முதல் இயங்கும் 4 சிறப்பு ரெயில்கள் எவை? தெற்கு ரயில்வே அறிவிப்பு 

07:40 AM May 31, 2020 | rajavel




தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இருந்து 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (திங்கட்கிழமை) முதல் கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட உள்ளது

ADVERTISEMENT

கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:02084) செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். இதைப்போல் மயிலாடுதுறை-கோவை ஜன் சதாப்தி சிறப்பு எக்ஸ்பிரஸ் (02083) செவ்வாய்க்கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் மதியம் 2.50 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 9.15 மணிக்கு கோவை சென்றடையும்.

கோவை-காட்பாடி ‘இன்டர்சிட்டி’ சிறப்பு எக்ஸ்பிரஸ்(02680), காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, அன்று காலை 11.50 மணிக்கு காட்பாடி சென்றடையும். இதைப்போல் காட்பாடி-கோவை ‘இன்ட்டர்சிட்டி’ சிறப்பு எக்ஸ்பிரஸ்(02679) காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.15 மணிக்கு கோவை சென்றடையும்.

மதுரை-விழுப்புரம் அதிவேக சிறப்பு ரெயில்(02636) காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 12.05 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இதைப்போல் விழுப்புரம்-மதுரை அதிவேக சிறப்பு ரெயில்(02635) மாலை 4 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 9.20 மணிக்கு மதுரை சென்றடையும்.

திருச்சி-நாகர்கோவில் அதிவேக சிறப்பு ரெயில்(02627), காலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இதைப்போல் நாகர்கோவில்-திருச்சி அதிவேக சிறப்பு ரெயில்(02628), நாகர்கோவிலில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.15 மணிக்கு திருச்சி சென்றடையும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT