ADVERTISEMENT

டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளில் 3,232 மரக்கன்றுகள் நடும் விழா..!

09:10 AM Oct 16, 2020 | tarivazhagan

ADVERTISEMENT


இந்தியாவின் விண்வெளி நாயகர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் 89 -ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ரோட்டரி மாவட்டம் 3232ல் இயங்கும் சென்னை நோபிள் ஹார்ட்ஸ் ரோட்டரி சங்கத்தின் சார்பில், அக்டோபர் 15 அன்று, 3,232 மரக்கன்றுகள் நடப்பட்டன.

ADVERTISEMENT

தி.நகர் வாசன் தெருவில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் திரைப்பட நடிகர் விவேக், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார். தியாகராய நகரில் வாசன் தெரு மற்றும் வடக்கு உஸ்மான் தெருக்களில் இந்த மரக்கன்றுகள் நடப்பட்டன.


இவ்விழாவில், சென்னையில் உள்ள பிரபல வைர வியாபாரி ரொட்டேரியன் மஹாவீர் போத்ரா மற்றும் அ.தி.மு.க எம்.ஜி.ஆர் இளைஞரணி இணைச் செயலாளரும், உங்களுக்காக சேரிடபிள் ட்ரஸ்ட் நிறுவனருமான டாக்டர் சுனில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நோபிள் ஹார்ட் ரோட்டரி சங்கத் தலைவர் பங்கஜ் கன்காரியா, செயலர் தினேஷ் கடாரியா ஆகியோர் முன்னிலையில் இவ்விழா நடத்தப்பட்டது. மரக்கன்றுகள் நடும் திட்டம் ரோட்டரி சங்கத்தின் சமுதாய வளர்ச்சி சேவைப் பிரிவின் சார்பில் மேற்கொள்ளப்பட்டது. இப்பிரிவின் இயக்குநர் ரோட்டேரியன் நரேந்தர் கன்காரியா, மற்றும் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் ரிஷப் சத்யா, கவுதம் போத்ரா ஆகியோர் இத்திட்டத்தினை முன்னின்று செயல்படுத்தினர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT