Skip to main content

'கலாமின் வாழ்வும் நினைவும் நம் வினையூக்கி' - கமல்ஹாசன் ட்வீட்!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020

 

former president of india apj abdul kalam birthday actor kamal hassan tweet

 

முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல்கலாமின் 89- ஆவது பிறந்த தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

இதையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "என்னை அரசியலுக்கு வர வைத்த வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர்; அவருடைய சாதனைகளும் தொலைநோக்குப் பார்வையும் நாளைய சந்ததியினரையும் நல்வழிப் படுத்தவேண்டும். ராமேஸ்வரத்தில் துவங்கி இந்தியாவின் முதல்குடிமகனான அப்துல்கலாமின் வாழ்வும் நினைவும் நம் அனைவருக்கும் வலிமையான வினையூக்கி." என்று குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சி; சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

Published on 22/06/2024 | Edited on 22/06/2024
actor Vijay Birthday party incident at Neelangarai near Chennai

சென்னையை அடுத்துள்ள நீலாங்கரையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் பிறந்தநாள் விழா இன்று (22.06.2024) நடைபெற்றது. இந்த விழாவானது அக்கட்சியின் மாவட்டத் தலைவர் சரவணன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையொட்டி இந்த விழாவில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

அதன்படி சிறுவன் ஒருவனின் கையில் தீ பற்றவைக்கப்பட்டு தீ எரிந்தபடி அந்த சிறுவன் கையால் ஓடு உடைக்கும் சாகச நிகழ்வு நடத்தப்பட்டது. இதற்காக மேடையில் ஓடுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதே சமயம் சிறுவனின் கையில் தீ பற்றவைக்கப்பட்டு, சிறுவன் ஓடுகளை உடைத்த போது, கையில் பற்றி எரிந்த தீ அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருந்தது. இதில், சிறுவன் வலியால் துடிப்பதைக் கண்டு அருகில் இருந்த நபர் தண்ணீர் என நினைத்து பெட்ரோல் கேனை எடுத்து சிறுவன் கையில் ஊற்றியாதக் கூறப்படுகிறது.

இதனால் மேலும் கைகளில் தீ பற்றி எரிந்தது. இதனைக்கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு தீயை அணைத்து, சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் சிறுவனின் கையில் பற்றிய தீயை அணைக்க முயன்றவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் இவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜகவினருக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுறுத்தல்!

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
Prime Minister Modi's important instructions to the BJP

நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதனையடுத்து மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக நேற்று (10.06.2024) அறிவிக்கப்பட்டன.

இந்நிலையில் பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் பாஜகவினரின் பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’ எனக் குறிப்பிட்டிருப்பதை நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக மோடியின் குடும்பம் (Modi Ka Parivar - மோடி கா பரிவார்) என சேர்த்தனர். அதிலிருந்து நான் நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். இது ஒரு வகையான சாதனையாகும். மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர். 

Prime Minister Modi's important instructions to the BJP

நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்படத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் இருந்து மோடியின் குடும்பம் என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காட்சிப் பெயர் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் ஒரு குடும்பம் என்ற நமது பிணைப்பு வலுவாகவும் உடைக்கப்படாமலும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது ‘பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை’ எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைத்தளத்தில் தளத்தில் தங்களது பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’ எனக் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.