ADVERTISEMENT

அரசு இயக்குனர் மீது 27 பெண் ஊழியர்கள் பாலியல் புகார்!

09:09 PM Apr 24, 2018 | Anonymous (not verified)


புதுச்சேரியில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகள் குறித்த புகார்களை விசாரிக்கும் ஆணையத்தை அமைக்க கவர்னர் கிரண்பேடி உத்தவிட்டார். இதையடுத்து அதற்கான ஆணையத்தை கலெக்டர் அமைத்தார். இதற்கு தலைவராக வித்தியா ராம்குமார் நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அரசுத்துறை இயக்குனர்கள் சிலர் மீதும் புகார் வந்தது. இதுகுறித்து வித்தியாராம்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே பல்வேறு புகார்கள் கவர்னருக்கும் வந்தன.

இந்த புகார்களையும் கவர்னர் அந்த ஆணையத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதில் கால்நடை இயக்குனராக இருக்கும் பத்மநாபன் மீது பலர் புகார் கொடுத்தனர். மொத்தம் 27 பெண்கள் புகார் கொடுத்தனர்.

இதன்மீது விசாரணை நடத்தியபோது அந்த இயக்குனர் தன்னுடன் பணிபுரியும் பெண்களை ஆசைக்கு இணங்க வலியுறுத்தியுள்ளார். அப்படி இணங்கவில்லை என்றால் வேறு இடத்திற்கு மாற்றிவிடுவேன் என்று மிரட்டியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து வித்தியா ராம்குமார் பாலச்சந்தருக்கு ஒரு சம்மன் அனுப்பினார். அதில் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. அவரின் பணி காலம் இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. தற்போது அவர் ராஜினாமா அல்லது நீண்டநாள் விடுப்பில் செல்ல முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT