ADVERTISEMENT

20 வருடங்களாக கள்ளச்சாராயம்... கண்டுகொள்ளாத காவல்துறை... களமிறங்கிய வனத்துறை...

06:57 PM May 15, 2019 | kalaimohan

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், சிங்காரப்பேட்டை வனச்சாரத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டுநாடுக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்காரப்பேட்டை வனச்சாரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டிய தனியார் நிலங்களில் கள்ளச்சாரயாம் பலப்பல ஆண்டுளாக காய்ச்சப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்த கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டும்மென கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதி மலைவாழ் மக்கள் சார்பில் பலமுறை பலர் வனத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு தந்தனர். யாரும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. அதிக நெருக்கடி வரும் நேரத்தில் மட்டும் காவல்துறை, சிலரை பிடித்து வந்து சாராயம் காய்ச்சினார்கள் என வழக்கு போடுவதோடு சரி. சாராய பானைகள், ஊறல் எங்கே எனக்கேட்டால், அந்தயிடத்துக்கு போக முடிவதில்லை, வனத்துறை ஊழியர்கள் ஒத்தொழைப்பதில்லை என காரணம் கூறி தப்பி வந்தனர்.

இந்நிலையில் திருப்பத்தூர் வட்ட வனத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அதிரடியாக வனத்துக்குள், வனத்தை ஒட்டிய பகுதிக்குள் சாராயம் காய்ச்சுவதை தடுக்க அதிரடி ரெய்டு செய்து வருகின்றனர். அதன்படி, திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் 21 பேர் கொண்ட குழுவினர் மாம்பாக்கம் காப்புக்காடு, மேல்பட்டு, சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு, சிங்காரப்பேட்டை மேற்கு பகுதிகளில் நடத்திய ரெய்டில் 1000 லிட்டர்க்கு மேற்பட்ட சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்துள்ளனர்.

அதோடு, வனத்தை ஒட்டியுள்ள பட்டா நிலப்பகுதியிலும் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ள வனத்துறை, அவர்கள் மூலமாகவே வனத்துக்குள் சாராய ஊறல் போட்டவர்கள், சாராயம் காய்ச்சியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

வனத்துறையே இந்த விவகாரத்தில் தீவிரமாக களம்மிறங்கியுள்ளது. களம்மிறங்க வேண்டிய காவல்துறை இதுப்பற்றி அக்கறை கொள்ளாமல் அசட்டையாக உள்ளது என குற்றம்சாட்டுகிறார்கள் இப்பகுதி பொதுமக்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT