திருவாரூர் அருகே கள்ளத்தனமாக மது விற்பனை செய்தததாக கைது செய்யப்பட்ட குற்றவாளியை காவல் நிலையத்தில் புகுந்து அடாவடியாக மீட்டு சென்ற 13 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
திருவாரூர் மாவட்டம் பழையவலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவர் கள்ளத்தனமாக அப்பகுதியில் மது விற்பனை செய்து வந்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் அவரை நேற்று கைது செய்து வைப்பூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ராஜாவின் நண்பர்கள் 13 பேர் கொண்ட கும்பல் குடிபோதையில் காவல் நிலையத்தில் அடாவடியாக புகுந்து விசாரணை மேற்கொண்டு வந்த காவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ராஜாவை மீட்டு சென்றனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நிவாஸ், மகேஸ், ரவி உட்பட 10 பேரை உடனடியாக கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தபட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் அவர்கள் பயன்படுத்திய லோடு ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடிவருகின்றனர்.