ADVERTISEMENT

மெட்ரோ பணி; சென்னையில் இடிக்கப்பட இருக்கும் 2 மேம்பாலங்கள்

07:49 PM Jan 06, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்காக இரண்டு மேம்பாலங்களை இடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இரண்டாம் கட்டமாக 118.9 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட பணிகள் முடிந்து மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைய இருக்கிறது.

இதில் மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான வழித்தடத்தின் 45.8 கிலோமீட்டருக்கான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் 50 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய இருக்கிறது. இந்த வழித்தடத்திற்காக கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையார் டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்பட இருக்கிறது.

இந்த மெட்ரோ ரயில் பாதைக்கான சுரங்கம் தோண்டும் பணிக்காக சென்னை அடையார் சந்திப்பில் உள்ள மேம்பாலம் இடிக்கப்பட உள்ளது. மேலும், ராதாகிருஷ்ணன் சாலையில் ராயப்பேட்டை சந்திப்பில் உள்ள மேம்பாலமும் இடிக்கப்பட உள்ளது. இந்த இரண்டு மேம்பாலங்களும் 4 ஆண்டுகளுக்குப் பிறகும் மீண்டும் கட்டப்படும். பாலங்களை இடிப்பதற்கான பணிகளைத் துவங்குவதற்கு முன்பு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், அதற்கு இணையாக இருவழி மேம்பாலம் கட்டப்பட உள்ளது. இருவழி மேம்பாலம் அமைக்கப்பட்ட பின் சுரங்கப்பாதை அமைக்கும் பணி துவங்கப்படும். சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் முடிந்த பிறகு இடிக்கப்பட்ட பாலம் மீண்டும் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT