5 rupees fee only on that day; Metro Notification

Advertisment

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தினத்தை முன்னிட்டு (3/12/2023) ஞாயிற்றுக்கிழமை அன்று மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஐந்து ரூபாய் மட்டுமே பிரத்தியேக கட்டணம் வசூலிக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஸ்டாடிக் கியூ.ஆர், பேடிஎம், வாட்ஸப், ஃபோன் பே மூலம் ஆன்லைனில் டிக்கெட் எடுத்து பயணிப்பவர்களுக்கு மட்டுமே இந்த ஐந்து ரூபாய் கட்டண சலுகை இருக்கும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட பயணிகள் ஓரிடத்தில் இருந்து இறங்கும் இடம் வரையில் ஒரு முறை பயணத்திற்கு மட்டுமே ஐந்து ரூபாய் கட்டணம் செல்லும். மெட்ரோ கார்டு வைத்திருப்பவர்கள், மாதாந்திர பாஸ் வைத்திருப்பவர்களுக்கு இந்த ஐந்து ரூபாய் பிரத்தியேக கட்டணம் செல்லாது. டிக்கெட் கவுண்டர்களில் காகித கியூஆர் பயணச்சீட்டு எடுத்து பயணிப்போருக்கும் இச்சலுகை பொருந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மெட்ரோவில் 40 ரூபாய் பயண கட்டணம் இருக்கும் நிலையில் அன்றைய தினம் மட்டும் இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.