
சென்னை வடபழனியில் மெட்ரோ ரயில்கட்டுமானப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிரேன் ஒன்று எதிர்பாராத விதமாக அரசு பேருந்தின் மீது மோதியதில் அரசு பேருந்தின் முன்பக்கம் நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இன்று காலை 5:15 மணிக்கு சென்னை வடபழனி பணிமனையிலிருந்து 159ஏ என்ற பேருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாத நிலையில், வடபழனியில் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டு இருக்கும் இடத்திற்கு அருகே சென்று கொண்டிருந்த பொழுது மெட்ரோ பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிரேன் ஒன்று பேருந்தின் மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்தானது. இதனால் பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. இதில் பேருந்து ஓட்டுநர் பழனி சிறிய அளவிலான காயத்துடன் தப்பித்துள்ளார். விபத்து சம்பவம் குறித்து வடபழனி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)