ADVERTISEMENT

கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 18 பேர் விடுவிப்பு... கண்ணீருடன் வரவேற்ற குடும்பத்தினர்

06:24 PM Nov 27, 2021 | kalaimohan

ADVERTISEMENT

கடந்த மாதம் 11 ஆம் தேதி நாகை துறைமுகத்திலிருந்து 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் 100 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்கச் சென்றனர். நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த இளையபெருமாள் என்பவரின் விசைப்படகு உட்பட மூன்று படகுகளில் சென்ற மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்தாக கூறி அப்படகிலிருந்த 23 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகள் காங்கேசன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேபோல் கைது செய்யப்பட்ட 23 பேரையும் இலங்கை காரைநகர் பகுதியில் தனிமையில் வைத்தனர். .

ADVERTISEMENT

இதற்கு முன்பே கடந்த செப்.26 ஆம் தேதி நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஆற்காட்டுத்துறை மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதனைக் கண்டித்து இரண்டு நாட்கள் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 23 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். 23 பேரும் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் 18 மீனவர்களுக்கு தலா 1,000 ரூபாய் அபராதம் விதித்து விடுதலை செய்யப்பட்டனர். 12 நாட்களுக்குப் பிறகு தமிழகம் அந்த அவர்களை அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT