இந்திய எல்லைக்குள் புகுந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் சரமாரி தாக்குதல் நடத்தியதால் மீனவர்கள் அரிவாள் வெட்டு காயங்களுடன் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சிப்பெறுகின்றனர்.

attack

Advertisment

நாகை மாவட்டம் விழுந்தமாவடி பகுதியியைச் சேர்ந்த ராஜேந்திரன், மணிமாறன், சத்தியன், இளம்பரிதி, காளிதாஸ் ஆகிய 5 மீனவர்கள் நேற்று மதியம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கே 18 கடல் நாட்டிகள் மைல் தொலைவில் இந்திய எல்லையிலேயே மீன்பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் தமிழக மீனவர்களின் படகுகளை சுற்றி வளைத்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் கொண்டு வந்திருந்த கத்தி, கம்பு, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Advertisment

இந்த தாக்குதல் சம்பவத்தில் மீனவர் ராஜேந்திரன் கடும் வெட்டு காயங்களுடன் மயங்கி விழுந்திருக்கிறார். தொடர்ந்து அவர்கள் பிடித்து வைத்திருந்த இறால் மற்றும் இதர வகை மீன்கள் மற்றும் வலைகள், ஜி.பி.எஸ் கருவிகள் போன்ற அனைத்தையும் கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து இலங்கை கடற்கொள்ளையர்கள் தப்பி சென்றனர்.

உயிர் பிழைத்தால் போதும் என்கிற நிலையில் பலத்த காயங்களுடன் கரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்களை விழுந்தமாவடி சக மீனவர்களின் உதவியோடு நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுவந்து சேர்த்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் நாகை கடலோரப்பகுதியில் பெரும் பரப்பினை ஏற்படுத்தியது மட்டுமில்லாமல் மீனவ கிராமங்களிடையே சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

" மத்திய, மாநில அரசுகள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடிக்கும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைத்திட ஆவனம் செய்திட வேண்டும், சுதந்திரமாக மீன்பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் ,"எனவும் கோரிக்கை வைத்துள்ளனர் மீனவர்கள்.