ADVERTISEMENT

சேலத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்கள் இடமாறுதல்;ஆட்சியர் ரோகிணி அதிரடி!

11:09 AM Nov 02, 2018 | kalaimohan

சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 வட்டாட்சியர்களை அதிரடியாக இடமாறுதல் செய்து ஆட்சியர் ரோகிணி உத்தரவிட்டுள்ளார். நிர்வாக நலன் கருதி இடமாறுதல் செய்யப்பட்டுள்ளதாக அவருடைய உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

நவம்பர் 1, 2018ம் தேதி முதல் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. இடமாற்றம் செய்யப்பட்ட வட்டாட்சியர்கள் பின்வருமாறு...

(புதிய பணியிடங்கள் பெயர்களுக்கு நேராகவும், பழைய பணியிடங்கள் அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ளன).

1. அ.பெ.பெரியசாமி - சேலம் விமான விரிவாக்க தனி வட்டாட்சியர் (காடையாம்பட்டி வட்டாட்சியர்)

2. ஜி.குமரன் - ஓமலூர் (சேலம் விமான விரிவாக்க தனி வட்டாட்சியர்)

3. கே.சித்ரா - சேலம் தெற்கு தனி வட்டாட்சியர் (ஓமலூர்)

4. பி.அன்புக்கரசி - பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் (தனி வட்டாட்சியர், நி.எ அலகு-1)

5. ஜி.சுமதி - தனி வட்டாட்சியர், நி.எ. அலகு-1 (வட்டாட்சியர், ஏற்காடு)

6. எம்.முருகேசன் - வட்டாட்சியர், ஏற்காடு (தனி மாவட்ட வருவாய் அலுவலரின் (நிஎ) நேர்முக உதவியாளர், சேலம்)

7. ஆ.பிரகாஷ் - சேலம் மாவட்ட ஆட்சியரக மாவட்ட மேலாளர், பொது. (பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர்)

8. வ.தேன்மொழி - டாஸ்மாக் கிடங்கு மேலாளர் (மாவட்ட மேலாளர் (நீதியியல்), ஆட்சியர் அலுவலகம்)

9. வி.வள்ளிதேவி - வட்டாட்சியர், வாழப்பாடி (தனி வட்டாட்சியர், டிஎன்ஹெச்பி, சேலம்)

10. ஆர்.பொன்னுசாமி - தனி வட்டாட்சியர், டிஎன்ஹெச்பி, சேலம் (வாழப்பாடி வட்டாட்சியர்)

11. ஜெ.ஜாகீர் உசேன் - சேலம் தெற்கு வட்டாட்சியர் (டாஸ்மாக் கிடங்கு மேலாளர்)

12. எஸ்.சுந்தரராஜன் - கெங்கவல்லி வட்டாட்சியர் (சேலம் தெற்கு வட்டாட்சியர்)

13. எம்.வரதராஜன் - வரதராஜன், தனி வட்டாட்சியர், ச.பா.தி., தனித்துணை ஆட்சியர், ச.பா.தி. அலுவலகம். (கெங்கவல்லி வட்டாட்சியர்)

14. கே.மகேஸ்வரி - காடையாம்பட்டி வட்டாட்சியர் (தனி வட்டாட்சியர், ச.பா.தி., சேலம்)

15. கே.அருள்குமார் - ஓமலூர் - மேட்டூர் அகல ரயில்பாதைத் திட்ட தனி வட்டாட்சியர், நி.எ. (சங்ககிரி வட்டாட்சியர்)

16. சி.ரவிச்சந்திரன் - சங்ககிரி வட்டாட்சியர் (தனி வட்டாட்சியர், நி.எ. ஓமலூர் - மேட்டூர் அகல ரயில்பாதைத் திட்டம்)

இடமாறுதல் செய்யப்பட்ட அலுவலர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேரும்படியும், அவ்வாறு பொறுப்பேற்றுக் கொண்டவுடன் அதுகுறித்து உடனடியாக விவரங்களைத் தெரிவிக்கும்படியும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இடமாறுதல் தொடர்பாக எவ்வித மேல்முறையீடும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT