ADVERTISEMENT

ஒரே நாளில் 14 வட்டாட்சியர்கள் இடமாற்றம்!

08:09 AM Jun 12, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர் அந்தஸ்திலான 14 அலுவலர்கள் ஒரே நாளில் வெவ்வேறு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது, வருவாய்த்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், ஒரே பிரிவில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் அலுவலர்கள், புகாருக்கு உள்ளானவர்கள் என ஒரே நாளில் வட்டாட்சியர் அந்தஸ்திலான 14 அலுவலர்களை இடமாற்றம் செய்து ஆட்சியர் ஸ்ரேயா சிங் உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் குடிமைப்பொருள் வழங்கல் தனி வட்டாட்சியர் பிரகாசம், பரமத்தி வேலூர் சமூகப்பாதுகாப்புத் திட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சேந்தமங்கலம் வட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். பரமத்தி வேலூர் சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் செந்தில்குமார் சேந்தமங்கலத்துக்கு மாற்றப்பட்டார்.

அரசு கேபிள் டிவி நிறுவன துணை மேலாளர் சக்திவேல், பேரிடர் மேலாண்மை பிரிவுக்கும், திருச்செங்கோட்டில் சென்னை - கன்னியாகுமரி தொழில் தடத்தின் தனி வட்டாட்சியர் செல்வராஜ், அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் துணை மேலாளராகவும் மாற்றப்பட்டனர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக தனி வட்டாட்சியர் (தேர்தல்கள்) சுப்ரமணியன், சென்னை - கன்னியாகுமரி தொழில்தட திட்டத்தின் திருச்செங்கோடு தனி வட்டாட்சியராகவும், திருச்செங்கோடு நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியர் சசிகலா குமாரபாளையம் நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியராகவும், பரமத்தி வேலூர் வட்டாட்சியர் கண்ணன் திருச்செங்கோடு நிலவரித்திட்ட தனி வட்டாட்சியராகவும் மாற்றப்பட்டு உள்ளனர்.

சென்னை - கன்னியாகுமரி தொழில் தடத்திட்டத்தின் தனி வட்டாட்சியர் மாதேஸ்வரி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியராகவும், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ராஜேஷ்கண்ணா சென்னை & கன்னியாகுமரி தொழில் தடத்திட்டத்தின் தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

குமாரபாளையம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் சிவகுமார், பரமத்தி வேலூருக்கும், குமாரபாளையம் தனி வட்டாட்சியர் ஜானகி அதே வட்டத்தில் சமூகப்பாதுகாப்புத் திட்டத்திற்கும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் உதவி மேலாளர் ராஜேஷ், நாமக்கல் நில எடுப்பு அலகின் தனி வட்டாட்சியராகவும், இங்கு பணியாற்றி வரும் லோகநாதன் டாஸ்மாக் உதவி மேலாளராகவும் மாற்றப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பிறப்பித்துள்ளார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT