ADVERTISEMENT

12ஆம் வகுப்பு தேர்வு முடிவு; தேதியை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

11:12 AM Apr 26, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் கடந்த மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3 ஆம் தேதி வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று முடிந்தது. கிட்டத்தட்ட ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 12 ஆம் வகுப்பு பொது தேர்வை எழுதியுள்ள நிலையில் முடிவுகளை எதிர்பார்த்து மாணவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் வரும் மே மாதம் 5 ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என முன்னதாக தமிழக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.

ஆனால் வரும் மே 7ஆம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற இருப்பதால் அது நீட் தேர்வெழுதும் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் என கருதப்பட்டது. இதனால் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு தேதியை மாற்றி பின்னர் அறிவிப்பதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. இந்நிலையில் வரும் மே 8 ஆம் தேதி காலை 9:30 மணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn..nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணைய தளங்களில் அறியலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT