ADVERTISEMENT

10 கோடி ஆண்டுகள் பழமையான கல்மரம் அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது 

03:38 PM Sep 14, 2021 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு ஒரு கல்மரம் கண்டெடுக்கப்பட்டு புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்தக் கல்மரம் கடந்த மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை (12.09.2021) தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் தொல்லியல் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்ற புதுகை பாண்டியன், நரிமேடு பகுதியில் கள மேலாய்வு மேற்கொண்டபோது அங்கே மேலும் ஒரு கல்மரம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அக்கல்மரத்தை புதுக்கோட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமியிடம் ஒப்படைத்தார் புதுகை பாண்டியன்.

இந்தக் கல்மரம் சுமார் 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், இதனை மண்ணியல் ஆய்வுக்கு உட்படுத்தி, சரியான காலத்தைக் கணக்கிட வேண்டும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நரிமேடு பகுதியில் அடுத்தடுத்து கல்மரங்கள் கிடைத்துவருவதால் ஆய்வாளர்களின் பார்வை நரிமேடு பக்கம் திரும்பியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT