ADVERTISEMENT

சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் எப்பொழுது?-முக்கிய முடிவை எடுத்த சபாநாயகர் அப்பாவு!

10:51 PM Feb 05, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. ஆளுநரின் இச்செயலுக்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து முடிவெடுக்க சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது.

மொத்தம் 13 சட்டமன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று கூடிய கூட்டத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 10 கட்சிகள் பங்கேற்றன. இக்கூட்டத்தை அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் ஆகிய மூன்று கட்சிகள் புறக்கணிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் பிப்ரவரி 8ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ''சட்டப்பேரவை விதி 143-ன் கீழ் சட்டமன்றத்தினுடைய சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, நீட் சம்பந்தப்பட்ட இந்தச் சட்ட முன்வடிவை மீண்டும் சட்டமன்றத்தில் விவாதித்து குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று சொல்லி கடிதத்தை எனது கவனத்திற்கு முன்பு கொண்டு வந்திருக்கிறார்கள். வருகின்ற பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகத்தினுடைய தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் வைத்து காலை 10 மணிக்கு தமிழக அரசினுடைய சிறப்புக் கூட்டத்தை கூட்டுவது என்று தீர்மானித்துள்ளேன்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT