ADVERTISEMENT

20 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை முறியடிப்போம்: நாராயணன் திருப்பதி 

04:21 PM Mar 06, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி, அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஆறு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளும், மமகவுக்கு இரண்டு தொகுதிகளும், இ.யூ.மு.லீக். கட்சிக்கு மூன்று தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தநிலையில் தனியார்த் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம், கூடுதல் தொகுதிகளை பாஜக கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், 20 தொகுதிகளை மட்டுமே அதிமுக தலைமை ஒதுக்கியுள்ளது குறித்தும், பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று திருமாவளவன் கூறியது குறித்தும் கேட்டதற்கு,

பாஜகவுக்கு 20 தொகுதிகள் என்பது கூட்டணிக் கட்சியுடன் பேசி எடுக்கப்பட்ட முடிவு. எத்தனை இடங்கள் போட்டியிடுகிறோம் என்பதைவிட எத்தனை இடங்களில் வெற்றி பெறுகிறோம் என்பதுதான் முக்கியம். இந்த 20 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை முறியடிப்போம். பாஜக வெற்றி பெறும் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT