ADVERTISEMENT

தெருக்களில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதி கோரி வழக்கு!

06:28 AM Aug 18, 2020 | rajavel

ADVERTISEMENT

விநாயகர் சதுர்த்தியின்போது தெருக்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கரோனா தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு, விநாயகர் சதுர்த்தியின்போது, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்நிலையில், தெருக்களில் விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி கோரி, தமிழ்நாடு கைவினை காகிதக் கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில், அதன் தலைவர் முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், ரம்ஜான் பண்டிகைக்கும், தூத்துக்குடி பனிமய மாதா கோவில் திருவிழாவிற்கும் அரசு அனுமதி அளித்ததால், விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில், உற்பத்தியாளர்கள் ஏராளமான சிலைகளைச் செய்து விட்டனர்.

விநாயகர் சதுர்த்தியின்போது எப்படியும் சிலைகளை விற்று விடலாம் என்ற நம்பிக்கையில், கடன் வாங்கி சிலைகளை உருவாக்கியுள்ளனர். தற்போது அரசு விதித்துள்ள தடை உத்தரவால், மிகுந்த பொருளாதார பாதிப்புக்கு ஆளாக நேரிடும் சூழல் நிலவுகிறது. காகித கூழில் செய்யப்பட்ட சிலைகள் என்பதால், இதனை அடுத்த ஆண்டிற்கு பயன்படுத்த முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT