ADVERTISEMENT

விசிக - பாமக மீண்டும் மோதல் போக்கு ?

12:29 PM Apr 10, 2019 | Anonymous (not verified)

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் வாக்கு வங்கி இருக்கும் கட்சியாக பார்க்கப்படுவது பாமக . இந்த நிலையில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை குற்றம் சாட்டி ஒரு அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார் . அதில் தேர்தலில் தோல்வி பயத்தின் காரணமாக விசிக கட்சியினர் பாமக போட்டியிடும் தொகுதிகளில் வன்முறையை தூண்டும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாதிரியான சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கதக்க செயல்கள் ஆகும் . தேர்தலை நேர்மையாகவும் , சுதந்திரமாகவும் நடைபெறவும் தோல்வி பயத்தில் கலவரத்தை தூண்டும் செயல்களில் ஈடுபடும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT



அதோடுமட்டுமில்லாமல் அத்துடன் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வேட்பாளர்களும் எந்தவிதமான தடையுமின்றி வாக்கு சேகரிப்பதை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும். விடுதலை சிறுத்தைகள் அளிக்கும் பொய்யான புகார்களின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவதையும் தேர்தல் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார் . இதனால் மறுபடியும் பாமக விசிக கட்சியினர் இடையே ஒரு வித மோதல் போக்கு உருவாகும் சூழல் உருவாகியுள்ளது . இந்த போக்கை தடுக்கும் வகையில் காவல் துறையும் , தேர்தல் அணையும் செயல்பட வேண்டும் . இரண்டு கட்சியினரும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் நன்றாக இருக்கும் என்று தொகுதி மக்கள் கருதுகின்றனர் .

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT