ADVERTISEMENT

இது எங்கே போய் முடியுமோ... ஜார்ஜ் ஃப்ளாய்டின் சம்பவம் குறித்து தொல்.திருமாவளவன் கருத்து!

11:29 AM Jun 02, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT


சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் மின்னசொட்டா மாநிலத்தின் மின்னியாபோலிஸ் நகரில், போலீஸ்காரர் ஒருவரால் குரல்வளை நசுக்கப்பட்டு, “என்னால் சுவாசிக்க முடியவில்லை” என்று கதறி அழுத படியே உயிரைவிட்ட கறுப்பின மனிதர் ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம், அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மின்னியாபோலிஸ் நகரில் நடந்த இந்தச் சம்பவத்தால் போராட்டங்கள் அதிகளவில் நடந்துவருகின்றன. இந்தச் சம்பவத்தால் கறுப்பின மக்களின் கோபம் வன்முறையாகப் பல இடங்களில் உருவெடுத்துள்ளது.


இந்த நிலையில் விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து கருத்து கூறியுள்ளார். அதில், அமெரிக்காவில் ஒருபுறம் வன்முறை, சூறை, களவு, தீவைப்பு! இன்னொருபுறம் ஜார்ஜ்ஃப்ளாய்ட் படுகொலையைக் கண்டித்து வெள்ளையினத்துக் காவல்துறையினரும் ஒற்றைக்காலில் மண்டியிட்டு ஆதரவு! இனவெறி ஃபாசிசத்துக்கு எதிரான போரில் கறுபர்களுடன் வெள்ளையினத்து மக்களும், சனநாயக சக்திகளாக வெள்ளயினத்தவர்களும். குறிப்பாக, ஆளும்- அதிகாரவர்க்கத்தைச் சார்ந்த காவல்துறையினரும்.. ஒருபுறம் பதற்றம்!.. ஒருபுறம் பக்குவம்!.. என்றும், ஜார்ஜ்ஃப்ளாய்ட் படுகொலையைக் கண்டித்து அமெரிக்கா முழுவதும் நடக்கும் வன்முறை ஒருவார காலமாக நீடிக்கிறது. இது எங்கே போய்முடியுமோ என உலகநாடுகள் கலக்கத்துடன் கவனித்துக் கொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT