vck

Advertisment

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவிப்பு வெளியிட்டது. மாவட்டங்கள் வாரியாக சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என மூன்று வகையான மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை இல்லாத அளவு அதிகபட்சமாக 2,293 பேர் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் 71 பேர் கரோனாவால் பலியாகி உள்ளனர். 1,061 பேர் குணமடைந்துள்ளனர். மாநிலவாரியாகப் பார்க்கும்போது, அதிகபட்சமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் இதுவரை 11,506 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் 1,879 பேர் குணமடைந்த நிலையில் 485 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

இந்த நிலையில் விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ஊரடங்கு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், முழு அடைப்பு நீட்டிப்பால் பாதிக்கப்படுபவர்களுக்கு நிவாரண திட்டங்களை அறிவிக்க வேண்டும்! வேலை இழப்புகளைதடுப்பதற்கும், நிவாரணம் அளிப்பதற்குமான அறிவிப்புகளை உடனே வெளியிடுமாறு மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.