ADVERTISEMENT

ஆணி பொருத்திய கம்பிகளால் இந்தியப் படையினரைத் தாக்கிய சீனப் படையினர்? பரபரப்பை ஏற்படுத்திய புகைப்படம்! 

12:15 PM Jun 18, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT

லடாக் பகுதியில் வீரமரணமடைந்த 20 ராணுவ வீரர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழனியும் ஒருவர் என்பதால், உயிரிழந்த ராணுவ வீரர் பழனியின் பூத உடல் அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, முப்படை வீரர்களின் ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. தங்களது எல்லைப் பகுதியினையொட்டி சாலைகளும், விமானத் தளங்களையும் கட்டமைப்புச் செய்து வரும் இந்தியாவினை எதிர்க்க, சமீபத்தில் தனது எல்லைப் பகுதியில் ராணுவத்தைக் குவித்த சீனாவிற்குப் போட்டியாக இந்தியாவும் ராணுவத்தைக் குவித்தது. போர்ப் பதற்றம் தொற்றிய நிலையில், ராணுவ மட்டத்திலான இரு தரப்பு உயரதிகாரிகளும் பேச்சு வார்த்தையினை தொடங்கினர். எனினும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தியத் தரப்பினை சேர்ந்த ராணுவ வீரர்கள் 20 நபர்கள் சீனா ராணுவ வீரர்களால் கொல்லப்பட்ட செய்தி வெளியானது.

இந்த நிலையில் வி.சி.க. கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ராணுவ வீரர்கள் தாக்குதல் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், கீழ்க்காணும் ஆணி பொருத்திய கம்பிகளால்தான் இந்தியப் படையினரைத் தாக்கிப் படுகொலை செய்துள்ளனர் சீனப் படையினர். எவ்வளவு கேவலமான அணுகுமுறை. இதுவா படைவீரர்கள் செய்யும் போர்முறை? சீனர்களின் கோழைத் தனத்தை வி.சி.க. வன்மையாகக் கண்டிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். சீனாவின் இந்த அணுகுமுறைக்கு இந்தியாவில் பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT