ADVERTISEMENT

“கத்தரிக்கோல் சின்னம்; அதிமுகவில் இருந்து விலகத் தயார்” - வைத்திலிங்கம்

09:41 PM Jun 12, 2023 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக அரசைக் கண்டித்து தஞ்சை தெற்கு மாவட்ட அமமுக சார்பில் ஒரத்தநாட்டில் கண்டனப் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், “சுயநலக்காரராக உள்ள எடப்பாடி பழனிசாமியால் தான் 2021 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தது. நாங்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் இன்று அதிமுக தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும். திமுக ஆட்சி எப்போது போகும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 524 தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்ட திமுக ஒரு வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. நெல்லுக்கு விலை குவிண்டாலுக்கு 2500 ரூபாய் என்றார்கள். கரும்புக்கு டன்னுக்கு 4000 ரூபாய் என்றார்கள். சிலிண்டர் கேஸ்க்கு ரூ. 100 மானியம் என்றார்கள். மின்வெட்டு, கள்ளச்சாராயம் என திமுக ஆட்சியில் நாடு சீரழிந்துகொண்டுள்ளது.

எங்களை எதிரிகள் நெஞ்சில் குத்தினால் தாங்கிக் கொள்ளலாம். துரோகிகள் அதிமுக ஆளுங்கட்சியாக வருவதைத் தடுத்துவிட்டார்கள். அதை நிறைவேற்றத்தான் அதிமுகவும் அமமுகவும் இரட்டை குழல் துப்பாக்கியாகச் செயல்பட இருக்கிறது. இங்கு ஆர்ப்பரிக்கும் கூட்டத்தின் சத்தம் தமிழ்நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியை மீண்டும் கொண்டுவர ஓபிஎஸ் - டிடிவி அடித்தளமிட்டுள்ளார்கள்.

எடப்பாடி பழனிசாமியிடம் இரட்டை இலை இல்லை என்றால் ஒரு தொகுதியில் கூட எடப்பாடி பழனிசாமி 1000 வாக்குகளைக் கூட வாங்க முடியாது. ஒருவர் பேசினாராம், அவர்கள் என்ன கத்தரிக்கோல் சின்னத்திலா நிற்கப்போகிறார்கள் என்று. நாங்கள் கத்தரிக்கோல் சின்னத்தில் நிற்கத் தயார். நீங்கள் பிளேடு சின்னத்தில் நிற்கத் தயாரா. எங்களை விட நீங்கள் ஒரு வாக்கு அதிகம் வாங்கிவிட்டால் நாங்கள் அதிமுகவில் இருந்தே விலகிவிடுகிறோம்” என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT