/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/18_71.jpg)
தனது பலத்தை நிரூபிக்கவும் அதிமுகவின் முப்பெரும் விழாவினைக் கொண்டாடவும் திருச்சியில் மாநாட்டினை ஏற்பாடு செய்திருந்தார் ஓபிஎஸ். திருச்சி பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் நடந்த இந்த மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.மாநாட்டில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர்ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், “1000 எடப்பாடி பழனிசாமி வந்தாலும் ஒரு பன்னீர்செல்வத்திற்கு சமம் இல்லை. இந்த கட்சி தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம். தொண்டர்களை மதிக்காதவன் அழிந்து போவான். இதற்கு தர்மம் பதில் சொல்லும். ஒரு பொறுப்பை கொடுத்தால் திருப்பிக் கொடுத்த வரலாறு இல்லை. அதை திருப்பிக் கொடுத்தவர் எனது சகோதரர் பன்னீர்செல்வம் என ஜெயலலிதா சொன்னார். மூன்று முறை கொடுத்த முதலமைச்சர் பதவியை திருப்பிக் கொடுத்தவர் ஓபிஎஸ் தான்.
எடப்பாடி பழனிசாமி முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். கொடநாடு கொள்ளை நடந்த நாள் ஏப்ரல் 24 ஆம் தேதியான இன்று. குற்றவாளி யாராக இருந்தாலும் எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் இறைவன் தண்டிப்பான். அதிமுகவில் ஓபிஎஸ் தான் ஒருங்கிணைப்பாளர்” எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)