ADVERTISEMENT

மிகப்பெரிய அளவில் போராட்டம்: வேல்முருகன் அறிவிப்பு

12:23 PM Sep 10, 2019 | rajavel

ADVERTISEMENT

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் இன்கோர்வ், ஹவுசிங் தொழிலாளர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT



இந்நிலையில் என்.எல்.சி நிர்வாகம் அனைத்து கட்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க, காங்கிரஸ் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஒப்புதல் தெரிவித்தனர் அதனால் அக்கட்சிகளின் போராட்ட நடவடிக்கை தள்ளிவைக்கப்பட்டது.


அதேசமயம் சி.ஐ.டி.யு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, வி.சி.க, ஏ.ஐ.டி.யு.சி, ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று வேலைநிறுத்த அறிவிக்கை பேரணி நடைபெற்றது. நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் தலைமையிலான போலீசார் பேரணியை வழியிலேயே தடுத்து நிறுத்தி 5 பேர் மட்டுமே தலைமை அலுவலகத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தினார்.

முக்கிய நிர்வாகிகள் என்எல்சி மனிதவளத்துறை முதன்மை பொது மேலாளர் தியாகராஜுவை சந்தித்து கோரிக்கை மனு மற்றும் வேலைநிறுத்த அறிக்கையை வழங்கினர். பிறகு பேசிய வேல்முருகன் "நெய்வேலியில் துரோக அரசியல் நடக்கிறது. ஏற்கனவே ஒப்பந்த தொழிலாளர்களுக்கு துரோக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் கடலூர் எம்.பி ரமேஷ் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து பாராளுமன்றத்தில் பேச வேண்டும்". மேலும் பேசிய அவர் " ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகள் குறித்து என்எல்சி நிர்வாகம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் அப்படி இல்லை என்றால் 15 நாட்களுக்கு பிறகு தமிழக அளவில் பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும்" என்றார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT