நெய்வேலி என்எல்சி நிறுவனம் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக விருத்தாசலம், புவனகிரி வட்டாரங்களில் உள்ள 40 கிராமங்களில் 12,125 ஏக்கர் பரப்பளவு விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் முயற்சித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

Advertisment

VV

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நெய்வேலி இரண்டாவது சுரங்கம் எதிரே நடைபெற்றது. தொல்.திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 40 கிராம மக்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கும் என்.எல்.சி நிறுவனத்தை கண்டித்தும், அதற்கு துணை நிற்கும் மத்திய அரசை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன்,

Advertisment

" மக்களின் வாழ்வாதரத்தை அழித்து விளை நிலங்களை கையகப்படுத்த துடிக்கும், என் எல் சி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கம் அமைக்கும் முயற்சியை விடுதலை சிறுத்தைகள் கட்சி முறியடிக்கும். மேலும் கனிம வளத்தை சுரண்டி மின்சாரம் தாயாரிக்கும் முயற்சியை கைவிட்டு, மாற்று வழியில் மின்சாரம் தயாரிக்க அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்.

VV

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

கடந்த 5 ஆண்டுகளாக அரசியலமைப்பு சட்டம், ஜனநாயகத்தை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் மோடி அரசிடம் இருந்து நாட்டின் வளர்ச்சி, சனநாயகம், அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற இந்திய இளைஞர்கள் ஒன்று சேர வேண்டும்.

சமவேலைக்கு சம ஊதியம் ஊதிய முரண்பாடு, உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராடுவது நியாமானது. எ கோரிக்கைகளுக்காக போராடும் ஆசிரியர்கள் மீது 17b சட்டம் பாய்வது, கைது நடவடிக்கையில் ஈடுபடுவது நியாயம் அற்றது " என்றார்.