ADVERTISEMENT

ஆறு அமைச்சர்கள் பின்னடைவு! எந்தெந்த அமைச்சர்கள்?

10:27 AM May 02, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போது வரை, திமுக கூட்டணி 130 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 99 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

அதிமுக கூட்டணி முன்னிலை நிலவரங்கள்: (10:20AM)

அதிமுக - 85 சட்டமன்றத் தொகுதிகள்.
பாஜக - 3 சட்டமன்றத் தொகுதிகள்.
பாமக - 11 சட்டமன்றத் தொகுதிகள்.
தமாக - 0
பிற கட்சிகள் - 0

திமுக கூட்டணி முன்னிலை நிலவரங்கள்:

திமுக - 108 சட்டமன்றத் தொகுதிகள்.
காங்கிரஸ் - 8 சட்டமன்றத் தொகுதிகள்.
விசிக - 4 சட்டமன்றத் தொகுதிகள்.
சிபிஎம் - 3 சட்டமன்றத் தொகுதிகள்.
சிபிஐ - 2 சட்டமன்றத் தொகுதிகள்.
மதிமுக - 4 சட்டமன்றத் தொகுதிகள்.
பிற கட்சிகள் - 1 சட்டமன்றத் தொகுதி.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே அதிமுக கூட்டணி பின்னடைவை சந்தித்து வருகிறது. குறிப்பாக, அமைச்சர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். ராயபுரத்தில் ஜெயக்குமார், மதுரவாயலில் பெஞ்சமின், ஆவடியில் மாஃபா பாண்டியராஜன், திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன், விழுப்புரம் தொகுதியில் சி.வி.சண்முகம், ராஜபாளையத்தில் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதேபோல் சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் தொடர்ந்து பின்னடைவை சந்தித்துள்ளனர். சென்னையில் திமுக வேட்பாளர்கள் தொடர்ந்து முன்னிலையில் உள்ளனர்.

அதேபோல், புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 9 சட்டமன்றத் தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 3 சட்டமன்றத் தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT