tn assembly election admk and dmk aliance parties leading details

Advertisment

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று (02/05/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கியது. தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போது வரை, திமுககூட்டணி 146 சட்டமன்றத் தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 87 சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்கள் நீதி மய்யம் 1 சட்டமன்றத் தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஜய் வசந்த் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டமன்றத் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 8 சட்டமன்றத் தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 3 சட்டமன்றத் தொகுதிகளிலும், பிற கட்சிகள் 1 தொகுதியிலும் முன்னிலையில் உள்ளன.

Advertisment

அதிமுககூட்டணி, திமுககூட்டணி முன்னிலையில் உள்ள தொகுதிகளை மாவட்ட வாரியாக பார்ப்போம்! (பிற்பகல் 02.00 மணி நிலவரம்)

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் சேலம் (வடக்கு), சங்ககிரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணியும், சேலம் (தெற்கு), சேலம் (மேற்கு), ஓமலூர், எடப்பாடி, ஏற்காடு, மேட்டூர், வீரபாண்டி, கெங்கவல்லி, ஆத்தூர் - சேலம் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுககூட்டணியும் முன்னிலையில் உள்ளன.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் பென்னேரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவும், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, திருத்தணி, பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 9 சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவும் முன்னிலையில் உள்ளன.

கோவை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யமும், மேட்டுப்பாளையத்தில் திமுகவும், கவுண்டம்பாளையம், கோவை (வடக்கு), தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, சூலூர் ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவும்முன்னிலையில் உள்ளன.

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருவரங்கம், திருச்சி (மேற்கு), திருச்சி (கிழக்கு), திருவெறும்பூர், லால்குடி, முசிறி, துறையூர், லால்குடி ஆகிய அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகமுன்னிலையில் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் போளூர், ஆரணி, செய்யாறு ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவும், செங்கம், திருவண்ணாமலை, கலசப்பாக்கம், கீழ்பென்னாத்தூர், வந்தவாசி ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவும் முன்னிலையில் உள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலத்தில் திமுககூட்டணியும், குன்னூர், கூடலூர் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகமுன்னிலையில் உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளிலும் திமுகமுன்னிலையில் உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவும், சோளிங்கர் சட்டமன்றத் தொகுதியில் திமுககூட்டணியும், ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவும் முன்னிலையில் உள்ளன.

சிவகங்கை மாவட்டத்தில், சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் அதிமுகவும், திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவும், காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் திமுககூட்டணியும் முன்னிலையில் உள்ளன.

தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, போடிநாயக்கனூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் அதிமுகவும், கம்பம், பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிகளில் திமுகவும் முன்னிலையில் உள்ளன.