ADVERTISEMENT

''அப்போவே எடப்பாடி கிட்ட சொன்னேன்... என் பேச்சை அவர் கேட்கல''-ராஜேந்திர பாலாஜி பேச்சு!

08:49 PM Sep 24, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் என்ன ராஜபக்சே ஆட்சியா நடக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

விருதுநகரில் நடைபெற்ற அதிமுக கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ''திமுக ஆட்சியில் இன்று ரொம்ப அகம்பாவம் நடந்து கொண்டிருக்கிறது. யாராவது எதிர்த்து பேசினால் புடிச்சு உள்ள போடு... என்ன ராஜபக்சே ஆட்சியா நடக்கிறது இங்கே. எல்லோரையும் மிரட்டி பார்க்க முடியுமா? எல்லாரையும் மிரட்டினால் படிஞ்சுருவாங்களா? என்ன செய்திட முடியும் உன்னால. எத்தனை நாள் புடிச்சு உள்ள வச்சுற முடியும். இதற்காக பயப்பட கூடியவன் அண்ணா திமுக தொண்டன் கிடையாது. மிட்டா மிராசுதாரர்களை பார்த்து, ஆலை அதிபர்களை பார்த்து அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பிக்கவில்லை. ஒட்டிய வயிறோடு, கிழிந்த சட்டையோடு உழைக்கின்ற வர்க்கம் இருக்கிறானே உழைப்பாளி, பாட்டாளி, விவசாயி அவனுடைய வாழ்க்கைத்தரம் உயர்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அதிமுக.

இந்த மேடையில் சொல்கிறேன் மெடிக்கல் காலேஜ் கொண்டு வந்தேன், ஆர்ட்ஸ் காலேஜ் கொண்டு வந்தேன், அருப்புக்கோட்டையில் ஒரு ஆர்டிஓ ஆபீஸ், சிவகாசியில் ஒரு ஆர்டிஓ ஆபீஸ் கொண்டு வந்தேன், வெம்பகோட்டையில் ஒரு தாலுகா ஆபிஸ், சாத்தூரில் ஒரு கோட்டாட்சியர் அலுவலகம், வத்திராகுடியிருப்பில் ஒரு வட்டாட்சியர் அலுவலகம். இப்படி எவ்வளவு கொண்டு வந்தோம். நீங்கள் கொண்டு வந்த எதையாவது ஒன்று சொல்லுங்கள். எல்லா ரோடும் நாங்க தான் போட்டோம். விருதுநகரில் ஜிஹெச் ஹாஸ்பிடல் நான் தான் பூமி பூஜை போட்டேன். நாங்க பார்த்து பார்த்து கட்டினோம். அதற்கெல்லாம் வெள்ளை அடிச்சு கல்வெட்டு வச்சிருக்காங்க. எடப்பாடியார் கிட்ட தேர்தலுக்கு இரண்டு மாதத்துக்கு முன்னாடியே சொன்னேன் 11 மெடிக்கல் காலேஜ்காக பில்டிங் எல்லாம் நாம கட்டி இருக்கோம். அதையெல்லாம் நாம் திறந்து வைத்துவிடுவோம் என்று, ஆனால் அவர் என் பேச்சை கேட்கல. பாலாஜி நாமதான் ஆட்சிக்கு வர போறோம். வந்ததுக்கு பின்னாடி எல்லா இடத்திலும் மீண்டும் அங்கேயே பங்க்ஷன் வச்சு பொதுமக்கள் முன்னாடி திறந்து வைப்போம் என்றார். எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் 10 வருஷம் ஆட்சியில் இருக்கிறோம் பொதுமக்கள் எதாவது மாற்றத்தை விரும்பினால் போச்சு என. ஆனால் நானே தோற்பேன் என்று எனக்கு தெரியாது. என்னை தோக்கடிப்பதற்காக திமுக ஒரு டீமை சென்னையில் இருந்தே கொண்டு வந்துடுச்சு. நான் என்ன செய்ய... மிகப்பெரிய டீமையே போட்டு விட்டாங்க. மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள் ஆனால் இப்பொழுது ஏமாற்றப்பட்டு நிற்கிறார்கள். நீட் தேர்வவை ஒழித்து விட்டார்களா? முதல் கையெழுத்து போடுவதற்கு பேனா இல்லையா? எழுதாத பேனா, மையில்லாத பேனாவிற்கு 80 கோடி ஒதுக்குகிறீர்கள் அதற்கு மத்திய அரசிடம் போய் போராடி அனுமதி வாங்குறீங்களே முதலில் நீட் தேர்வு விலக்கிற்கு அனுமதி வாங்குங்க'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT