ADVERTISEMENT

''கண்கள் இருந்தால் கண்ணீர் வரும்'' - கே.எஸ்.அழகிரி விளக்கம்  

12:21 PM Mar 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பதால், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று (05.03.2021) அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திமுக தரப்பில் காங்கிரசுக்கு அதிகபட்சமாக 22 இடங்கள்தான் ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழுக்கூட்டத்தில், திமுக தர முன்வரும் தொகுதிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதைக் குறிப்பிட்டுப் பேசியபோது கே.எஸ்.அழகிரி கண் கலங்கியதாக தகவல்கள் வெளியாகின.

''நாம் 15 வருடமாக திமுக கூட்டணியில் உள்ளோம். 100 தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கிறது. எனவே கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை அவர்களே தருவார்கள் என எதிர்பார்த்தோம். தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதைவிட, நம்மை நடத்திய விதம்'' எனக் கூறுகையில் கண் கலங்கிய கே.எஸ்.அழகிரி, கண் கண்ணாடியைக் கழற்றி கண்ணீரைத் துடைத்துக்கொண்டு ''இனி நான் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டேன். நீங்களே சென்று பேசி தொகுதிப் பங்கீடு செய்து வாருங்கள், நான் இறுதியாக கையெழுத்திட வருகிறேன்'' என நிர்வாகிகளிடம் பேசியதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், இன்று காலை காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் தொடங்கி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நேற்று கண்கலங்கியது தொடர்பாக பேசிய கே.எஸ்.அழகிரி ''கண்கள் இருந்தால் கண்ணீர் வரும்'' என விளக்கமளித்த அவர், “ஆலோசனையில் எந்த வருத்தமும் இல்லை. தொடர்ந்து நேர்காணல் நடைபெற்று வருகிறது. நேர்காணல் முடிந்த பிறகு திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT