Skip to main content

தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரை தாங்குமா?

Published on 11/09/2019 | Edited on 11/09/2019

 

"நாடாளுமன்றத் தேர்தலில் வலிமையாக இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சட்டமன்றத் தேர்தல் வரை தாங்குமா' என சந்தேகம் கிளப்புகிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள். 
 

நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் வசந்தகுமார், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அத்தொகுதி காலியாக இருக்கிறது. அதேபோல, விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி காலமானதால், அத்தொகுதியும் காலியாக உள்ளது. நாங்குநேரிக்கு நவம்பருக்குள்ளும், விக்கிரவாண்டிக்கு டிசம்பருக் குள்ளும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். 
 

இரு தொகுதிகளுக்கும் நவம்பரில் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருவதால், இரு தொகுதிகளிலும் தி.மு.க.வே போட்டியிட அறிவாலயம் திட்டமிட்டுள்ளது. தி.மு.க.வின் திட்டத்தை அறிந்து, "நாங்குநேரியை விட்டுவிடக்கூடாது' என இப்போதிலிருந்தே காய்களை நகர்த்தியபடி இருக்கிறார்கள் காங்கிரஸ் தலைவர்கள்.  
 

ksa


 

இந்த நிலையில், இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்க, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நாங்குநேரி தொகுதியில் நடந்த நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக் குள் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. 
 

இது குறித்து நம்மிடம் பேசிய நெல்லை மாவட்ட காங்கிரஸ்காரர்கள், ""கூட்டத்தில் பேசிய அனைத்து நிர்வாகிகளும், "இந்த தொகுதி காங்கிரஸ் போட்டியிட்டு ஜெயித்த தொகுதி. அதனால் மீண்டும் காங்கிரசே போட்டியிட வேண்டும். அதற்கேற்ப தி.மு.க.விடம் பேசி தொகுதி யைக் கேட்டுப் பெறுங்கள்' என வலியுறுத்தினர். 



கூட்டத்தில் பேசிய கே.எஸ்.அழகிரி, ""உங்கள் உணர்வுகளைப் புரிந்துகொண்டிருக்கிறேன். மேலிடத்தில் தெரிவிக்கப்படும். பொதுவாக காங்கிரசின் ஆணிவேர் தென் மாவட்டங்களில் தான் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் உயிர்நாடி யும் அதுதான். அதனை நாம் வலிமைப்படுத்த வேண்டும். 50 ஆண்டுகாலமாக காங்கிரஸ் எதிர்க் கட்சி வரிசையிலேயே இருந்து வருவதற்கு காரணம் என்ன?  எப்போதாவது யோசித்திருக்கிறோமா? பிற மாவட்டங்களில் எப்படியிருந்தாலும் தென் மாவட்டங்களில் பலமாக இருக்கும் நாம் தனித்துப் போட்டியிட்டால் ஜெயிக்க முடியுமா? முடியாதா? கூட்டணி வலிமையில்லாமல் ஜெயிப்பது கஷ்டமா?'' என கேள்வி எழுப்பியவர், கட்சியின் வளர்ச்சிக்காக பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார்.

 

ஆனால், "தனித்துப் போட்டியிட்டால் ஜெயிக்க முடியாதா?' என அவர் கேட்ட கேள்வி, நாங்குநேரியில் கூட்டணி இல்லையாங்கிற சந்தேகத்தை எங்களுக்குள் ஏற்படுத்தியது. நாங்குநேரியை காங்கிரசுக்கு ஒதுக்காமல் தி.மு.க. தவிர்த்தால் கூட்டணி உடைகிறதோ இல்லையோ தி.மு.க.வை ஜெயிக்க வைக்கும் கடமையிலிருந்து காங்கிரஸ் தொண்டர்கள் விலகிக்கொள் வார்கள். அது, கூட்டணியில் பிளவை ஏற்படுத்தும்'' என விவரித்தனர். 

 

கே.எஸ்.அழகிரியின் அந்த பேச்சு வெளியே கசிந்து கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில்... "நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஒருமனதோடு இணைந்து வெற்றிபெற செய்ய வேண்டும்' என தீர் மானம் நிறைவேற்றப்பட்டதாக பரவிய செய்தி கூட்டணிச் சிக்கலை விரிவுப்படுத்தி யிருக்கிறது. மேலும்,  நாங்குநேரியில் காங் கிரஸ் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார் காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர்.   

 

இந்த நிலையில், காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவரிடம் பேசியபோது, ""நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திருச்சியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி, ""நாங்குநேரியில் தி.மு.க. போட்டியிடும்'' என தெரிவித்தார். கூட்டத்தில் இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் இதனை மறுக்கவில்லை. இதனால், அப்போதே எங்களுக்கு பதட்டம் வந்துவிட்டது. "நாங்கு நேரியை மறந்துவிடுங்கள்' என்கிற தகவலே தி.மு.க. தரப்பி லிருந்து எங்களுக்கு கிடைத்தபடி இருக்கிறது. அதனால், காங்கிரசுக்குத்தான் நாங்குநேரி என்பதை தி.மு.க. தலைமையிடம் பேசி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என சோனியாகாந்தியிடமும் ராகுல்காந்தி யிடமும் நாங்கள் வலியுறுத்தியுள் ளோம். காங்கிரசுக்கு தொகுதி கிடைக் காமல் போனால் கூட்டணி உறவு முறியலாம்'' என்கிறார் அழுத்தமாக. 
 

கூட்டணிச் சிக்கலுக்கு வித்திட்டி ருக்கும் நாங்குநேரி ஆலோசனைக் கூட்டம் குறித்து நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிவக்குமா ரிடம் நாம் பேசியபோது, "" கூட்டத்தில் பேசிய அழகிரி, "இந்த கூட்டத்துக்கும் தேர்தலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. காங்கிரஸ் வெற்றிப்பெற்ற தொகுதி என்பதால் காங்கிரஸ் மீண்டும் போட்டி யிட வேண்டும் என விருப்புகிறீர்கள். கூட்டணியில் நாம் இருப்பதால் அது பற்றி முடிவெடுக்க முடியாது. கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும். யார் போட்டி யிட்டாலும் அவர்களை வெற்றிபெற வைப்பது நமது கடமை' என்று பேசினாரே தவிர, கூட் டணிக்கு எதிராகப் பேசவில்லை. நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்பது உள்பட கூட்டத்தில் சில தீர்மானங்களை நிறைவேற்ற முடிவு செய்து அதனை எழுதி வைத்திருந்தோம். கூட்டம் துவங்குவதற்கு முன்பு இதுகுறித்து கே.எஸ்.அழகிரி எங்களிடம் விவாதித்தபோது, "காங்கிரஸ் போட்டியிடுவது குறித்த தீர்மானம் வேண்டாம்' எனச் சொல்ல, அதனை நீக்கிவிட்டோம். அதனால், அப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால், விவாதிப்பதற்கு முன்பு எழுதி வைத்திருந்த பேப்பரை யாரோ ரிலீஸ் செய்துவிட்டனர். அதனால் வந்த குழப்பம் இது'' ‘’ என்கிறார். 


 

இந்த நிலையில் தீர்மானம் குறித்து சிவக்குமாரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பதால், "கூட்டணிக்குள் சிக்கலா' என்கிற  விவகாரம் குறித்து, காங்கிரஸ் செயல் தலைவர் டாக்டர் விஷ்ணுபிரசாத் எம்.பி.யிடம் கேட்டபோது, ""நிர்வாகிகளின் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டு தனது கருத்தினை வெளிப்படுத்தியிருக் கிறார் அழகிரி. அது, கூட்டணிக்கு எதிரானது அல்ல. கூட்டணிக்கு எதிராக அவர் பேசவும்மாட்டார். தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதை தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு காங்கிரஸ் தலைமையும் தி.மு.க. தலைமையும் இணைந்து முடிவெடுக்கும். கூட்டணி வலிமையாகவே இருக்கிறது'' என்கிறார் அழுத்தமாக.  

 

tkse


 

இந்த விவகாரத்தில் அறிவாலயத் தின் கருத்தறிய தி.மு.க.வின் செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங் கோவன் எம்.பி.யிடம் பேசியபோது, ""காங்கிரஸ் ஜெயித்த தொகுதி என்பதால் நாங்குநேரியில் போட்டியிட காங்கிரஸ் விரும்புவதை தவறு என சொல்ல முடியாது. விருப்பங்கிறது அவர்களின் உரிமை சார்ந்த விசயம். அதேசமயம், நாங்குநேரி யாருக்கு என்பதெல்லாம் இப்போது விவாதிக்க வேண்டியதில்லை. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கோரிக்கை வைத்தால் அப்போது இரு கட்சிகளின் தலைமையும் கலந்தாலோசித்து தீர்வு காண்பார்கள். தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை. கூட்டணி உறுதியாகவே இருக்கிறது'' என்கிறார் இயல்பாக. 
 

தி.மு.க.-காங்கிரஸ் எம்.பி.க்களின் கருத்துக்கள் இப்படி இருந்தாலும், தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான தரப்பிலிருந்து கிடைக்கும் தகவல்களோ, "கூட்டணியிலிருந்து காங்கிரசை கழட்டிவிட சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறது தி.மு.க. தலைமை' என்கின்றன. 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.