ADVERTISEMENT

இஸ்லாமிய அமைப்புகளின் சட்டப்பேரவை முற்றுகை போராட்டம்! -தடை விதிக்கக்கோரி மனு தாக்கல்!

12:52 PM Feb 17, 2020 | rajavel

ADVERTISEMENT

பிப்ரவரி 19-ம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ள சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT



சி ஏ ஏ சட்டத்திற்கு ஆதரவளிக்க மாட்டோம் என தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்திற்குத் தடை விதிக்கக்கோரி, இந்திய மக்கள் மன்ற தலைவர் வராகி சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

இந்த மூறையீட்டைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, மனுவாகத் தாக்கல் செய்தால் விசாரிப்பதாகத் தெரிவித்தது. இதனையடுத்து, இது தொடர்பாக வராகி மனு தாக்கல் செய்துள்ளார்.



அந்த மனுவில், குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினர். இந்தப் போராட்டங்கள் சட்டவிரோதமாக நடப்பதாகவும், இதில் சிலர் உயிரிழந்ததாக தவறான தகவலை அரசியல் கட்சி பிரதிநிதிகளே பரப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் இந்தப் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் கூட்டாக இணைந்து சிஏஏ, என்ஆர்சி, என்பி ஆர் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இச்சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவளிக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, வரும் பிப்ரவரி 19-ம் தேதி சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்துவோம் என அறிவித்துள்ளது.

இத்தகைய போராட்டங்கள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், சட்ட ஒழுங்கிற்கும் பாதிப்பை ஏற்படும் என்பதால், பிப்ரவரி 19-ம் தேதி நடத்தத் திட்டமிட்டுள்ள தலைமைச் செயலக முற்றுகை போராட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என சென்னை கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த வராகி என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT