ADVERTISEMENT

பெரியாரை மறந்த கழகங்கள்... இயக்குனர் பா.ரஞ்சித் கடும் விமர்சனம்!

10:49 AM May 16, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ADVERTISEMENT


தி.மு.க.வின் சார்பில் கரோனா பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து வந்துள்ள ஒரு லட்சம் கோரிக்கைகளை தமிழக அரசிடம் நேரில் முன் வைப்பதற்கு தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு தலைமையில் முன்னாள் மத்திய அமைச்சரும், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான தயாநிதிமாறன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அடங்கிய குழு தலைமைச் செயலாளரைச் சந்தித்து மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களைக் கொடுக்க சென்றனர். அப்போது தலைமைச் செயலாளர் மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும், உங்களைப் போன்ற ஆட்களிடம் இதுதான் பிரச்சனை என்று கூறியதாகவும் தி.மு.க.வினர் கூறினர்.


இந்நிலையில், தலைமைச் செயலாளருடன் நடந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதிமாறனின் கருத்து சர்ச்சையானது. இது குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "நாங்க என்ன தாழ்த்தபட்டவர்களா? சமூகவெறுப்பு, அவமதிப்பு, உரிமை மறுப்பு, தலித் மக்களுக்கு இவைகளைச் செய்யலாம் என ஒப்புக் கொள்கிறீர்களா? சமூகநீதி அறியாமையால் தலித்வெறுப்பு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இயல்பாக மண்டிக்கிடக்கிறது என எப்போது உணர்வீர்கள் கழகங்களே? பெரியாரை மறந்த கழகங்கள்" என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT