கர்நாடகா பகுதிகளில் 'நீலம் பண்பாட்டு மையம்' ஒருங்கிணைப்பில் உருவாக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசியல் பள்ளி, சட்ட ஆலோசனை மையம், விளையாட்டு மற்றும் கலைத்திறமைகள் பயிற்சி பள்ளிகள், அம்பேத்கர் நூலகங்கள், வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் தொடங்குவோர் ஆலோசனை மையம் போன்றவற்றை இயக்குநர் பா.ரஞ்சித் துவக்கி வைத்தார்.

Advertisment

director-pa-ranjith-Speech

அப்போது பேசிய பா. ரஞ்சித், "இந்தியாவில் மதத்தாலும், சாதியாலும் மக்களை பிரித்தாளுகிற சூழ்ச்சியானது நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டே போகிறது. இந்த சூழலில் நமக்கு பாதுகாப்பாக இருக்கக் கூடியது அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டம் தான். அவரை பின்பற்றினால் மட்டுமே நமக்கான விடுதலை சாத்தியம். நமக்குள் இருக்கிற முரண்களை களைந்துவிட்டு, நாம் எல்லோரும் ஓரணியில் திரண்டாக வேண்டிய மிகமுக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். எனவேதான் இளைஞர்கள் அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் இவற்றையெல்லாம் செய்கிறோம். விரைவில் தமிழகம் முழுவதும் இதுபோல முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படும்" என்றார்.