ADVERTISEMENT

அமமுகவை கட்சியாக பதிவு செய்து பொதுச்செயலாளராகிறார் டிடிவி தினகரன்?

12:39 PM Apr 19, 2019 | rajavel

ADVERTISEMENT

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அமமுகவைச் சேர்ந்த வேட்பாளர்கள் சுயேட்சையாகவே போட்டியிட்டனர். அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

ADVERTISEMENT


இந்த நிலையில் தேர்தல் சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்த போது, நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி, அமமுகவை கட்சியாக பதிவு செய்ய டிடிவி தினகரன் முடிவெடுத்துள்ளார் என்றும், அமமுக பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் செயல்படுவார் என்றும், விரைவில் நடக்க உள்ள அமமுக நிர்வாகிகள் கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதிமுகவில் ஓ.பி.எஸ். அணி - ஈ.பி.எஸ். என பிரிந்தபோது, அமமுக என புதிய கட்சியை தொடங்கி அதற்கு பொதுச்செயலாளராக சசிகலாவும், துணைப்பொதுச்செயலாளராக டிடிவி தினகரனும் செயல்பட்டு வந்தனர். அதிமுக மீதான உரிமை கோரும் வழக்கை, சிறையில் உள்ள சசிகலா நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT