/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Dhinakaran.jpg)
பெங்களூரு சிறையில் நேற்று சசிகலாவை சந்தித்த இரண்டு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், டி.டி.வி.தினகரனை பற்றி சொல்லி கண்ணீர் விட்டு அழுதனர். அதைத்தொடர்ந்து இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா, இன்னொரு மகள் ஷகிலா, அவரது கணவர் ராஜராஜன், நடராஜன் தம்பி பழனிவேல் ஆகியோர் சசிகலாவை சந்தித்தனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
சசிகலா சொன்ன மூன்று வேலைகளை தினகரனிடம் சொல்லியும், தினகரன் தட்டிக்கழித்ததை விவேக் சொல்லியுள்ளார். ஜெ. ஆட்சிக் காலத்தில் கடலூர் பகுதிக்கு பொறுப்பாளராக இருந்த நடராஜனின் தம்பி பழனிவேல், அந்த பகுதிகளில் அமமுகவில் நடைபெறும் குளறுபடிகளை வர்ணித்ததோடு, சசிகலாவின் தம்பி திவாகர், அவரை சந்தித்தையும், பழனிவேலிடம் திவாகர் கொடுத்த திட்டத்தையும் எடுத்து சொன்னார்.
இளவரசியின் மகள்கள், அமமுகவில் இருப்பவர்கள் பலர் அதிமுகவில் சேர்ந்துகொண்டிருக்கிறார்கள் என்றும், அமமுக பிரமுகர்கள் பலரை திமுக வலைக்க திட்டமிட்டிருப்பதாகவும் மொத்தத்தில் அதிமுகவும், திமுகவும் அமமுகவை எளிதில் அழித்துவிடும். அதற்கு முக்கிய காரணம் தினகரன் மற்றும் அரவது மனைவி அணுராதா ஆகியோரின் செயல்பாடுகளே என விளக்கியுள்ளார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்த சந்திப்புகளுக்கு நடுவில் தினகரனை வெளியே இருக்க சொன்ன சசிகலா, கடைசியில் தினகரனை பார்த்தார். அவரை, அவரது பதவி ஆசையையும், செயல்பாடுகளையும் பற்றி காரசாரமாக திட்டியதோடு, திவாகர் கொடுத்து அனுப்பிய மெசேஜ் பற்றியும் எடுத்து சொல்லியுள்ளார்.
சசிகலா சந்திப்புக்கு பிறகு மிக மிக இறுக்கமான முகத்துடன் வெளியே வந்தார் தினகரன். தனக்கு நெருக்கமானவர்களிடம் பேசும்போது, என்னையும், எனது மனைவி அணுராதாவையும், தாறுமாறாக திட்டுகிறார் சசிகலா. இவர் இப்படி திட்டுவார் என்று எனக்கு தெரியும். அதனால்தான் எப்பொழுதும் என் மனைவியுடன் வந்து சசிகலாவை சந்திக்கும் நான், இந்த முறை மனைவியை அழைத்து வரவில்லை என்று பதில் சொல்லியிருக்கிறார்.
தினகரனை துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்கிற கோரிக்கை சசிகலாவிடம் அவர்களது உறவினர்களாலேயே முன் வைக்கப்பட்டதை அறிந்த தினகரன், ராஜினாமா செய்யும் முடிவில் இருக்கிறார் என்கிறது அமமுக வட்டாரங்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)