ADVERTISEMENT

பிரச்சாரத்தை துவங்கிய இடத்திலேயே முடித்த ஸ்டாலின்...!

11:24 AM Apr 17, 2019 | selvakumar

கடந்த 20-ம் தேதி கலைஞர் பிறந்த திருவாரூரில் தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று இறுதிப் பிரச்சாரத்தை அதே மண்ணில் முடித்திருக்கிறார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சுமார் ஒரு மாத காலமாக நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தலுக்கான சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டார். அக்கினி வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரத்தை மேற்கொண்டார் திமுக தலைவர் ஸ்டாலின். இதுவரை கண்டிராத ஸ்டாலினை இந்தத் தேர்தலில் பொது மக்கள் கண்டனர், முதிர்ச்சியான பேச்சு, பக்குவமான அனுசரிப்பு, அனைத்து மக்களையும் நேரடியாக சந்திப்பு, இடத்திற்கு தகுந்தார்போல் பேச்சு, என மெருகு ஏறியவராகவை பிரச்சாரத்தை செய்து முடித்திருக்கிறார்.

இறுதி நாள் பிரச்சாரத்தை நேற்று திருவாரூரிலேயே நிறைவுசெய்ய கும்பகோணத்தில் இருந்து காலையில் புறப்பட்டு வலங்கைமானில் இருந்து பிரச்சாரத்தை துவங்கினார். அங்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து கதிர்அரிவால் சின்னத்தில் வாக்கு கேட்டு பேசினார்.

"கஜா புயலால் பாதிக்கப்பட்ட மறுநாளே நான் நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினேன். ஆனால், தமிழகத்தை ஆளும் முதல்வர் ஒருவார காலத்திற்கு பின்னர் ஹெலிகாப்டரில் வந்துவிட்டு சென்றார். பிரதமர் மோடி பாதித்த பகுதிகளை பார்வையிடவும் இல்லை, ஆறுதல் வார்த்தைகூட மக்களுக்கு தெரிவிக்கவில்லை. மேலும் தமிழக அரசு கேட்ட நிதியையும் ஒதுக்கீடு செய்யவில்லை. இந்த நிலையில் பிரச்சாரத்தை மண்ணின் மைந்தர் என்ற முறையில் பிரச்சாரத்தை இந்தத் தொகுதிகயில் துவங்கி முடிக்க வந்துள்ளேன். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக்களிப்பதன் மூலம் காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும். ஹைட்ரோகார்பன் திட்டங்கள் கைவிடப்படும், ஆண் பெண் என பாகுபாடின்றி சமமாக கூலி வழங்கப்படும், நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் வழங்கப்படும்" என்றவர்.

"செம்மொழிகண்ட கலைஞருக்கு ஆறடி நீளம் கொடுக்க மறுத்தவர்களை சும்மாவிடலாமா" என்றார். மேலும், "தமிழ் செம்மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர். காமராஜர், அண்ணாவிற்கு மணிமண்டபம் கட்டியவர். ஐந்து முறை முதலமைச்சராக பதவி வகித்தவர். மெரினாவில் அண்ணா சமாதி அருகில் அவரது உடலை வைக்க வேண்டும் என்பதுதான் அவரின் ஆசை. அதை நிறைவேற்றுவதற்காக நான் நேரடியாக முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்தேன். வெட்கத்தைவிட்டு எடப்பாடி வீட்டுக்கு நேரடியாக சென்று கேட்டோம். ஆனால், ஆறடி கூட கொடுக்க மறுத்துவிட்டனர். அதன் பின்னர் நீதிமன்றத்தை அணுகி நிறைவேற்றி வைத்தோம். நமது தலைவருக்கு ஆறடி நிலம் கொடுக்க மருத்தவர்களுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கக்கூடாது. கலைஞரின் மகனாக உங்களிடம் வந்து நான் வாக்கு கேட்கிறேன். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படுகின்றபோது தமிழகத்தில் 22 தொகுதிகளில் இடைத் தேர்தலின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே எதிர்காலத்தை நினைவில் கொண்டு செல்வராஜூக்கு வாக்களியுங்கள்” என்று பேசி முடித்தார்.

பிறகு திருவாரூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலைவாணருக்கும் வீதி வீதியாக சென்று வாக்கு கேட்டவர் மாலை 6 மணிக்கு பிரச்சாரத்தை முடித்தார்.

அதன் பின்னர் திருவாரூர் தொகுதி மற்றும் நாகப்பட்டினம் தொகுதிக்கான நிலவரம் எப்படி இருக்கிறது என நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT