ADVERTISEMENT

'இதுவா சமூக நீதி?' - ராமதாஸ் கேள்வி

07:28 PM Dec 01, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அண்மையில் அரசு மாநகர பேருந்துகளில் இலவசப்பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளிடம் பேருந்து நடத்துநர்கள் பெயர், வயது, செல்போன் எண், சாதி ஆகியவற்றை கேப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'தமிழ்நாட்டில் அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. இது பாட்டாளி மக்கள் கட்சியால் முன்மொழியப்பட்ட திட்டம்.

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் அவர்களின் பெயர், வயது, சாதி, கல்வித்தகுதி உள்ளிட்ட 15 வகையான வினாக்கள் கேட்கப்பட்டு, அதன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வந்தன. இது தேவையானதும் கூட. இந்தத் தகவல் சேகரிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தார். அதற்கு பதில் அளித்த போக்குவரத்து அமைச்சர் இத்தகைய கணக்கெடுப்பு மிகவும் அவசியம், இது சமூகநீதி நடவடிக்கை என்று கூறியிருந்தார்.

அமைச்சரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்த நான், ’’நகரப் பேருந்துகளில் மகளிரை இலவசமாக பயணிக்க அனுமதிக்கும் திட்டம் சமுதாயத்தின் எந்த அடுக்கை சேர்ந்தவர்களுக்கு, எந்த வயதினருக்கு, எத்தகைய வருவாய் உள்ளோருக்கு பயன்படுகிறது என்பதை கண்டறிந்து அதனடிப்படையில், திட்டத்தை இன்னும் கூர்மைப்படுத்துவது தான் இதன் நோக்கம் என்று தமிழக அரசு கூறியிருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பின் நோக்கமும் இதுவே தான். கல்வி, வேலைவாய்ப்பு, சமூக நீதி, மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளால் யாரெல்லாம் பயனடைகிறார்கள் என்பதைக் கண்டறிந்து சமூகநீதியை வலுப்படுத்துவது தான் சாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம். அதை செயல்படுத்த அரசு மறுப்பது ஏன்? அதில் என்ன சிக்கல் உள்ளது?” என்று வினா எழுப்பியிருந்தேன்.

இது நடந்தது நவம்பர் 27-ஆம் நாள். அதன்பின் 4 நாட்கள் கழித்து இது தொடர்பாக அதிரடி நடவடிக்கை ஒன்றை தமிழக அரசு எடுத்திருக்கிறது.

அது என்ன நடவடிக்கையாக இருக்கும்? தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு ஆணையிட்டு விட்டதோ என்று தானே நினைக்கிறீர்கள். வாயில் போட்டுக் கொள்ளுங்கள்.... அது தான் இல்லை. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களிடம் சமூகநீதி கணக்கெடுப்பு நடத்துவதை நிறுத்தி விட்டார்கள் என்பது தான் அந்த நடவடிக்கை. சமூகநீதியை எப்படி பாதுகாக்கிறார்கள்' பாருங்கள்' என பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT