Skip to main content

தனது நிலையில் மாறாத பாமக நிறுவனர் ராமதாஸ்! அப்செட்டான கட்சிகள்! 

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

நேற்று தமிழக சட்டமன்றத்தில் மறைந்த முன்னாள் தமிழக அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் திரு உருவப் படத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த விழாவில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பதை, மற்ற கட்சிகள் தான் அதிகமாக எதிர்பார்த்திருந்தார்கள். ஏனெனில் பாமகவை தொடங்கிய பொழுது டாக்டர் ராமதாஸ் அளித்த ஒரு வாக்குறுதி எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ படாது என அறிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் டாக்டர் ராமதாஸ் வருவாரா என்று கேள்வி எழுந்தது. மேலும் தனது வாக்குறுதியை மீறினால் விமர்சனங்கள் வரும் என்ற சூழலில் படத் திறப்பு விழாவுக்கு வரவில்லை என்று அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர். 
 

pmk



அதோடு முதலமைச்சருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். அதில்,   "அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கம்! உழைப்பாளர் மக்கள் கட்சியின் நிறுவனரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை சட்டப் பேரவை மண்டபத்தில் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு திறக்கும் விழாவிற்கான சட்டப் பேரவைச் செயலாளரின் அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க நன்றி! வாழ்நாளில் சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்தில் ஓர் அடி எடுத்து வைக்க மாட்டேன் என்று உறுதி ஏற்று, அதை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். ராமசாமி படையாட்சியார் உரிமைகள் அற்று கிடந்த ஊமை ஜனங்களுக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்தவர், போராடியவர். அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் சட்ட பேரவை மண்டபத்தில் அவரது உருவப்படத்தை திறப்பது அவருக்கு செய்யப்படும் சரியான அங்கீகாரம் ஆகும். இதற்காக தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தாங்கள் தான் அறிவித்து அரசாணை வெளியிட்டு இருந்தீர்கள். அதுமட்டுமின்றி கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அவரது உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அதற்கான அடிக்கல்லையும் கடந்த ஆண்டு நட்டு வைத்தீர்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரியவர் ராமசாமி படையாச்சியார் நினைவைப் போற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தொடர்ச்சியாக அவரது திருவுருவ படமும் சட்டப் பேரவை மண்டபத்தில் திறக்கப்படுவது அவருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. திரு ராமசாமி படையாச்சியார் உருவ படம் திறப்பு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என டாக்டர் ராமதாஸ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.